பால் கொழுக்கட்டை

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான பால் கொழுக்கட்டையை சுவைத்து மகிழுங்கள்.

இந்த பாரம்பரிய உணவான, பால் கொழுக்கட்டை, தமிழ் மனம் கமழும் ஒரு அசல் சுவையாகும். பால் கொழுக்கட்டை என்பது விநாயகர் சதூர்த்தி பண்டிகையின் போது செய்து உண்ணப்படும் ஒரு விசேஷ பலகாரமாகும். தமிழ் மனம் கமழும் இந்த பால் கொழுக்கட்டை செய்வதற்கு சுலபமான ஒரு பலகாரமாகும். மேலும் அதை எப்படி செய்வதென இன்றைய ஹாட்ஸ்பாட் கிச்சனில் நாம் பார்க்கப்போகிறோம். சரி, வாசகர்களே, அசல் தமிழ் மனம் கமழும் பால் கொழுக்கட்டை செய்யும் முறையை தெரிந்துக்கொள்ள நாம் ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு போகலாமா.

தேவையான பொருட்கள்:

இப்போது, பால் கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்களை காண்போம்:

 • அரிசி மாவு, ¼ கிலோ
 • வெல்லம், 400 கி
 • பால், 250 மி.லி.
 • தேங்காய் பால், 250 மி.லி.
 • சுக்கு, 1
 • ஏலக்காய், 4
 • மிளகு
 • சர்க்கரை, 2 தேக்கரண்டி
 • சமையல் எண்ணெய், தேவையான அளவு
 • உப்பு, தேவையான அளவு

செய்முறை:

பால் கொழுக்கட்டை எப்படி செய்வதென இப்போது காண்போம்.

 1. பால் கொழுக்கட்டை செய்முறையில் முதற்படியாக, நாம் வெல்லப்பாகை தயார் செய்ய வேண்டும்.
 2. இரண்டாம் படி: மாவு தயார் செய்தல். ஒரு பாத்திரத்தில் வெண்ணீரை கொதிக்க விடவும்; அதில் உப்பு, சர்க்கரை, மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெயை சேர்த்து அந்த நீரை நன்றாக கொதிக்கவிடவும்.
 3. கொதிக்க வைத்த நீரை கொண்டு அரிசி மாவை பிசைந்து எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டிக்கெள்ளவும்.
 4. ஒரு அகலமான பாத்திரத்தில் 3 கப்புகள் நீரை எடுத்துக்கொண்டு சூடாக்கவும். நீரில் கொதி வந்தவுடன், உருட்டி வைத்துள்ள கொழுக்கட்டை உருண்டைகளை அதில் போட்டுக்கொள்ளவும். உருண்டைகளை போடும் போது அது ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யவும்.
 5. அதிக தீயில் அந்த உருண்டைகளை 10 நிமிடங்கள் வரை வேகவிடவும். 10 நிமிடங்கள் கழித்து உருண்டைகள் நீரில் மிதந்து வரும்போது அவை நன்றாக வெந்திருக்கும்.
 6. இரண்டு தேக்கரண்டி அரிசி மாவை திரவமாக கரைத்து கொழுக்கட்டை வேகும் நீரில் கலக்கவும். அது பால் கொழுக்கட்டைக்கு நல்ல அடர்த்தியை தரும்.
 7. ஏலக்காய், மிளகு, மற்றும் சுக்கை நன்கு தூளாக அரைத்து அதில் ஒரு தேக்கரண்டியை கொதிக்கும் பால் கொழுக்கட்டையில் சேர்க்கவும். அது பால் கொழுக்கட்டைக்கு நல்ல சுவையை தரும்.
 8. எடுத்து வைத்துள்ள பால், மற்றும் தேங்காய் பாலை பால் கொழுக்கட்டையுடன் கலக்கவும்.
 9. தேங்காய் பாலை சேர்த்ததும் அடுப்பை அணைத்துவிடவும்.
 10. இதோ, பாரம்பரிய அசல் சுவையுடன் கூடிய பால் கொழுக்கட்டை சுட சுட பரிமாற தயாராக இருக்கிறது.
 11. பண்டிகையை கொண்டாட அருமையான ஒரு பலகாரம்.