வஞ்சிரம் மீன் வறுவல்

உங்கள் எல்லோரையும் ஹாட்ஸ்பாட் கிச்சனுக்கு வருக, வந்து சுவையுடன் நறுமணம் கமழும் சமையல் குறிப்பை பெறுக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். தனது தனித்துவ சுவைக்காகவும், அளவுக்காகவும், ஊட்டச்சத்துக்காகவும் அறியப்பட்டு இந்தியாவில் பலரது சுவைமிகுந்த கடல் உணவுகளில் ஒன்றாக இருப்பது நம் வஞ்சிரம் மீன். அந்த மீனை துண்டுகளாக வெட்டி எண்ணெயில் பொறித்து சாப்பிடுவது அலாதி சுவையை தரும். அத்தகைய வஞ்சிரம் மீன் வறுவலை தான் இன்று நம் ஹாட்ஸ்பாட் கிச்சனில் பார்ப்போகிறோம் வஞ்சிரம் மீன் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

  • வஞ்சிரம் மீன், ½ கிலோ
  • மஞ்சள் தூள், ½ தேக்கரண்டி
  • மீன் வறுவல் மசாலா, 2 தேக்கரண்டி
  • அரிசி மாவு, 1½ தேக்கரண்டி
  • காஷ்மீரி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி
  • தனியா தூள், 1 தேக்கரண்டி
  • எலுமிச்சைப்பழம், 1 எண்ணிக்கை
  • உப்பு, தேவையான அளவு
  • எண்ணெய்

செய்முறை விளக்கம்:

  1. வறுப்பதற்கு வஞ்சரை மீன் துண்டுகள் மெல்லியதாக இருக்கவேண்டும். அப்போது தான், மீன் உள்ளே மிருதுவாகவும் வெளியே மொறு மொறுப்பாகவும் இருக்கும்.
  2. வறுவல் மசாலாவை தயார் செய்ய, மஞ்சள் தூள், மீன் வறுவல் மசாலா, அரிசி மாவு, காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், தேவையான அளவு உப்பு ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதில் எலுமிச்சை சாறு, நீர் அல்லது எண்ணெயை விட்டு நன்றாக கலக்கி கலவையை தயார் செய்யவும்.
  3. தயார் செய்துள்ள மசாலாவை மீன் துண்டுகள் மீது படலமாக பூசி அதை எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். இப்படி செய்வதால் மீன் மீது பூசப்பட்டுள்ள மசாலா படலம் வறுக்கும் போது உதிர்ந்து போகாது.
  4. பின்னர் மீனை மசாலாவில் 20 முதல் 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  5. தேவையான அளவு எண்ணையை தவாவில் சுடாக்கிக்கொண்டு அதில் தயார் செய்துள்ள வஞ்சரை துண்டுகளை போட்டு இருபுறமும் வறுத்து எடுத்தால் மொறு மொறு சுவையுள்ள வஞ்சரை மீன் வறுவல் தயார்.