கோடை ஸ்பெஷல் மாம்பழ லஸ்ஸி

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான கோடை ஸ்பெஷல் மாம்பழ லஸ்ஸியை சுவைத்து மகிழுங்கள்.
என்ன கோடை காலம் வந்தாச்சா? வெயிலின் தாக்கமும் அதிகமாச்சா? நேரா பீச்சுக்கு போயி ஜில்லுனு குளியல் போட்டா நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்களா? வாங்க, இப்போ ஹாட்ஸ்பாட் கிச்சன் சமுத்திரத்துக்குள்ள போயி ஜில்லுனு ஒரு மாம்பழ லஸ்ஸி குளியல போட்டுட்டு வரலாமா? கோடை ஸ்பெஷல் மாம்பழ லஸ்ஸி குடிச்சிட்டு இந்த ஜில் அனுபவம் எப்படி இருக்குனு கமெட்ல சொல்லுங்க. வாங்க ஹாட்ஸ்பாட் கோடை கிச்சனுக்குள்ள போலாம்.

கோடை ஸ்பெஷல் மாம்பழ லஸ்ஸி செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய மாம்பழம் (வெட்டி வைத்தது), 1 எண்ணிக்கை
தயிர், 1 கப்பு
சர்க்கரை, தேவையான அளவு
ஐஸ் கட்டிகள், 4 எண்ணிக்கை
ஏலக்காய் தூள், 2 சிட்டிகை

செய்முறை விளக்கம்:
1. முதலில் மாம்பழத்தை மிக்ஸியில் போட்டு கூழாக அரைத்துக்கொள்ளவும்.
2. மாம்பழம் அரைபட்டவுடன் தயிர், சர்க்கரை, மற்றும் ஐஸ்கட்டிகளை போட்டு லேசாக அரைக்கவும்.
3. பிறகு சிறிது ஏலக்காய் தூளை சேர்த்து அரைக்கவும்.
4. இப்போது அரை திரவ நிலையில் வந்திருக்கும் மாம்பழ லஸ்ஸியை கிளாஸ் டம்ளரில் ஊற்றி மேலே அழகுக்கு புதினா இலைகளை வைக்கவும்.
5. இதோ, கோடை வெயிலை தனிக்க நமது இல்லங்களிலேயே ஒரு ஜில் அனுபவம், கோடை ஸ்பெஷல் மாம்பழம் லஸ்ஸி.