தென்னிந்திய மத்தி மீன் மண்பானை குழம்பு

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான அசல் பாரம்பரியம் நிறைந்த மத்தி மீன் மண்பானை மீன் குழம்பை சுவைத்து மகிழுங்கள்.
சைனீஸ், காண்டினென்டல், ஜப்பானிய, இத்தாலிய மற்றும் இன்னும் பல சமையல் முறைகள் உலகம் முழுவதிலும் காணப்பட்டாலும் நமது பாரம்பரிய தென்னிந்திய சமையல் முறையை போன்ற மணமும் சுவையும் நிறைந்த உணவை நம்மால் எங்குமே காண முடியாது. நமது தென்னிந்திய சமையல் முறையில் தயாரான மத்தி மீன் மண்பானை குழம்பை சுவைத்து மகிழும் இன்பமே தனி. மத்தி மீன் மண்பானை குழம்பு நமது பாட்டியம்மாவின் கைப்பக்குவத்திலும் தென்னிந்திய சமையல் முறையிலும் தயாரிக்கப்படுகிறது. நமது மூத்த தலைமுறைக்கு கிடைத்திருந்த அரிய பொக்கிஷமான மத்தி மீன் மண்பானை குழம்பு இப்போது நமது சமையலறைக்கும் வந்துள்ளது, அதுவும் உங்கள் அபிமான ஹாட்ஸ்பாட் கிச்சன் வாயிலாக. ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து அசல் பாரம்பரியம் மிக்க தென்னிந்திய சமையில் முறையில் தயாரான மத்தி மீன் மண்பானை குழம்பை சுவைத்து மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்:
இப்போது, மத்தி மீன் மண்பானை குழம்பு செய்ய தேவையான பொருட்களை காண்போம்:
மத்தி மீன், 1 கிலோ
மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி
மிளகாய் தூள், 2 தேக்கரண்டி
நல்லெண்ணெய், 2 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம், 3
நறுக்கிய தக்காளி, 2
வெட்டிய மாங்காய், 1
கருவேப்பிலை
வெந்தயம், 1 தேக்கரண்டி
சீரகம், ½ தேக்கரண்டி
பச்சை மிளகாய், 4
நறுக்கிய பூண்டு, 5
புளி கரைசல், 1 கப்பு
உப்பு, தேவைக்கேற்ப
தயாரிப்பு செய்முறை:
1. மத்தி மீனை எடுத்து செதில், செவில், குடல், துடுப்பு ஆகியவற்றை நீக்கி சுத்தம் செய்யவும். சுத்தம் செய்துள்ள மத்தி மீனுடன் மஞ்சள் தூள், கல்லுப்பு மற்றும் நல்லெண்ணெயை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். மசாலாவில் மீனை அறை மணிநேரம் ஊறவிடவும்.
2. நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கி மிக்ஸியில் விழுதாக அறைத்துக்கொள்ளவும்.
3. ஒரு மண்பானையில் நல்லெண்ணெயை சூடாக்கி அதில் சீரகத்தை போட்டு தாளிக்கவும். வெந்தயம் பொரிந்தவுடன், அதில் பூண்டு, சீரகம், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிளையை சேர்க்கவும்.
4. அடுப்பை குறைந்த தீயில் வைக்கவும். இப்போது, கலவையுடன் மிளகாய தூளை சேர்த்து சற்று நேரம் வதக்கவும். மிளகாய் தூள் கலவையுடன் நன்கு சேர்ந்தவுடன், விழுதாக அரைத்து வைத்துள்ள இஞ்சி-பூண்டையும் புளி கரைசலையும் சேர்த்து நன்கு கலக்கவும். தேவையான அளவு நீரையும் சேர்க்கவும்.
5. தேவைக்கேற்ப உப்பை சேர்த்து குழம்பை 6 – 7 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
6. கொதிநிலை வந்தவுடன், மசாலாவில் ஊறவைத்துள்ள மத்தி மீனையும் வெட்டி வைத்துள்ள மாங்காவையும் குழம்பில் போட்டு 7 – 10 நிமிடங்கள் கொதிக்க விடவும். அளவுக்கு அதிகமாக குழம்பை கொதிக்க விடக்கூடா, ஏனெனில் மீன் கூளமாக சிதைந்துவிடும்.
7. குழம்பில் எண்ணெய் மேல மிதந்து வந்தால் போதும், காரசாரமான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான மத்தி மீன் மண்பானை குழம்பு தயார்.
8. இதை அன்புடன் எடுத்து உங்கள் அன்பானவர்களுக்கு பரிமாறுங்கள்!