ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான முட்டை பணியாரத்தை சுவைத்து மகிழுங்கள். நம் மனதிற்கு பிடித்தவர்களுடன் வீட்டில் ஒன்றாக அமர்ந்து தேனீர் பருகும் போது வயிற்றுக்கு தீனி தருவது என்பது ஒரு நல்ல அனுபவம் தான். அந்த அனுபவத்தை மேலும் சுவையுள்ளதாக மாற்ற நம் ஹாட்ஸ்பாட் சிக்கனில் கொண்டு வருகிறோம், முட்டை பணியாரம். முட்டை பணியாரம் என்றதுமே உங்கள் நாவுகள் நடனமாடவும் உங்கள் வயிறு கூப்பாடு இடம் ஆரம்பித்துவிட்டதென புரிகிறது. வாருங்கள் முட்டை பணியாரத்தை எப்படி செய்வதென இன்றைய ஹாட்ஸ்பாட் கிச்சனில் காண்போம். ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து முட்டை பணியாரத்துடன் அசல் பாரம்பரிய சமையல் முறையை கொண்டாடுங்கள். தேவையான பொருட்கள்: இப்போது, முட்டை பணியாரம் செய்ய தேவையான பொருட்களை காண்போம்:
- முட்டை, 4
- நறுக்கிய பச்சை குடைமிளகாய், 1 கப்பு
- நறுக்கிய சிகப்பு குடைமிளகாய், 1 கப்பு
- நறுக்கிய வெங்காயம், 1 கப்பு
- நறுக்கிய முட்டைகோஸ், 1 கப்பு
- நறுக்கிய கொத்தமல்லி, 1 கப்பு
- மஞ்சள் தூள், 1 சிட்டிகை
- மிளகாய் தூள், 2 சிட்டிகை உப்பு, தேவைக்கு ஏற்ப
செய்முறை:
- முட்டை பணியார செய்முறையில் முதற்படி, ஒரு கிண்ணத்தில் மேற்காணும் அனைத்து பொருட்களையும் ஒன்றாக கொட்டி நன்றாக கலக்கிக்கொள்ளவும்.
- பணியார கடாயை குறைந்த தீயில் சுடாக்கி, கடாயில் எண்ணெய் பூசவும்.
- தயார் செய்து வைத்துள்ள பணியார மாவை கடாய் குழிகளில் நிரப்பி அடுப்பை குறைந்த தீயில் வைத்து வேகவைக்கவும்.
- முட்டை பணியாரங்கள் ஒருபுறம் வெந்தவுடன், அல்லது 45 விநாடிகள் கழித்து, அவற்றை திருப்பி போடவும்.
- சற்று நேரம் கழித்து முட்டை பணியாரம் இருபுறமும் வெந்துள்ளதா என்பதை சரிபார்த்து அவற்றை எடுத்து சுடசுட கிண்ணத்திலோ அல்லது தட்டிலோ வைத்து பரிமாறவும்.
- முட்டை பணியாரம் உங்கள் உணவு மேஜைகளை அலங்கரித்து உங்கள் பசியை திருப்திப்படுத்த தயாராகிவிட்டது.
ஒரு பதிலை விடுங்கள்