கொள்ளு ரசம் சமையல் குறிப்பு

உங்கள் எல்லோரையும் ஹாட்ஸ்பாட் கிச்சனுக்கு வருக, வந்து சுவையுடன் நறுமணம் கமழும் சமையல் குறிப்பை பெறுக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். அறுசுவையும் ஆறா பசியும் நாம் வாழும் காலம்வரை நம்முடனேயே பயணிக்கிறது. அறுசுவை அற்ற வாழ்வையும் நம்மால் கற்பனை செய்ய முடியாது. அதே போலவே, ஆறா பசியையும் நம்மால் கற்பனை செய்ய முடியாது. இரண்டில் எது இல்லாவிடினும் வாழ்வே மாயம்போன்றாகிவிடும். நாம் பெற்ற வாழ்வை இன்பமுற வாழ துணை புரிவதற்கே இவ்விரண்டும் நம் வாழ்வில் பிணைந்திருக்கிறது. ஆயினும் இந்த இருகாரியங்களுடன் மூன்றாவதாக ஒன்று இருப்பதையே இன்றைய தலைமுறையினர் மறந்துவிட்டனர் என்று தான் கூற வேண்டும். ஆம், ஆரோக்கியம் எனுமந்த மூன்றாம் கூறினை மறந்த இந்த தலைமுறையினர் அநேக வியாதிகளுக்கும் உடல் உபாதைகளுக்கும் மிக எளிதாக ஆளாக நேரிடுகிறது. இப்படிப்பட்ட இந்த முக்கிய கூறினை நினைவுகூறும் விதமாக இன்றைய ஹாட்ஸ்பாட் கிச்சனில் நாம் ஆரோக்கியமாமன கொள்ளு ரசம் எப்படி செய்வதென பார்க்கப்போகிறோம். கொள்ளு ரசம் செய்ய தேவையான பொருட்கள்: வறுத்த கொள்ளு, 2 தேக்கரண்டி புளிக்கரைசல், 1 கப்பு சீரகம் மற்றும் மிளகு, 1 தேக்கரண்டி பூண்டு, 8 பள்ளு பச்சை மற்றும் சிவப்பு மிளகாய், 1 எண்ணிக்கை சிறிய தக்காளி (பழுத்தது), 2 எண்ணிக்கை கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி பெருங்காயம், ¼ தேக்கரண்டி மஞ்சள், ¼ தேக்கரண்டி உப்பு, தேவைக்கேற்ப எண்ணெய் செய்முறை விளக்கம்:

  1. முதலில், மிளகு, சீரகம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டை மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளவும்.
  2. அடுத்து, பழுத்த தக்காளியை நீரில் பிழிந்துக்கொண்டு அதில் புளி கரைசலையும் சேர்த்துக்கொள்ளவும். பிறகு அரைத்து வைத்துள்ள சீரகம் மிளகு பூண்டு விழுதையும் கொள்ளையும் அதில் சேர்த்து ஊறவிடவும்.
  3. இந்த கரைசலில் சிறிது கொத்தமல்லியை கசக்கி சேர்த்த பின்னர் தேவையான அளவு உப்பையும் மஞ்சள் தூளையும் சேர்க்கவும்.
  4. பின்னர், கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானவுடன், சிறிது மிளகையும் உளுந்து கடுகையும் சேர்த்து தாளிக்கவும். அவை தாளிக்கப்பட்டவுடன் காய்ந்த மிளகா, பெருங்காயத்தூள, கருவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும்.
  5. பின்னர், தயார் செய்து வைத்துள்ள கரைசலை கடாயில் சேர்த்து 2 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.
  6. இந்த ரசத்தை அதிக நேரம் கொதிக்கவிடாமல் முதல் கொதி வந்தவுடன் கொத்தமல்லியை சேர்த்து இறக்விட வேண்டும்.
  7. இப்போது, சுட சுட ஆரோக்கியமான கெள்ளு ரசம் பரிமாற தயார்.

அன்புடனும் சுவையை மட்டும் அல்லாமல் ஆரோக்கியத்தையும் சேர்த்து பரிமாறுங்கள்.