எங்களைப்பற்றி

 

ஹாட்ஸ்பாட் கிச்சன் – உயிரூட்ட சமையல்

எனது குடும்பம் சமையல் மீதான தனது ஆர்வத்தை கண்டறிந்த நாள் முதல் நாங்கள் எங்களது யோசனைகளை எல்லாம் ஒருங்கிணைத்து இந்த இணையதளத்தை நிறுவி அதில் எங்களது வீடியோக்களை வெளியிட முடிவுசெய்தோம். இந்த அருமையான பயணம் எங்கள் வழக்கத்திற்கும் தொழிலுக்கும் இடைப்பட்ட ஒரு நிகழ்வாகவே இருக்கிறது!

சமையல் ஒரு ஆனந்தமான அனுபவம் என்பதை உணர்ந்த ஒரு குடும்பமாக, நாங்கள் அதை ஒரு அணியாகவும் அதற்கு மேலாகவும் செய்துப்பார்த்து, சுவையான உணவுகளை சாப்பிட்டு, அதற்கு மேலும் அதை இரசித்து மகிழ்ந்தோம். பாரம்பரிய தென்னிந்திய சமையலை வழக்கமான உணவுகளுடனும் அசல் சுவையுடனும் உங்கள் சமையலறைக்கே கொண்டு வருகிறது ஹாட்ஸ்பாட் கிச்சன். வடஇந்திய சமையற்கலை, சீனா மற்றும் அதிக சிக்கன், மட்டன், கடல் உணவு, சைவம், முட்டை, பசியை தூண்டும் உணவு, இனிப்புகள், ஸ்நாக்ஸ் ஆகியவற்றை கொண்ட காண்டினென்டல் மற்றும் காலை உணவு மற்றும் இரவு உணவு சமையலையும் நாங்கள் செய்து காட்டுகின்றோம். குழந்தைகளுக்கான சமையல் குறிப்புகளும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் அவர்கள் அதை பெரியவர்களின் மேற்பார்வையில் தாங்களே முயற்சி செய்து பார்க்கலாம்.

உணவு சேர்க்கைக்பொருட்கள், செயற்கை நிறங்கள் / சுவையூக்கிகள், பதனப்பொருட்களை ஊக்குவிக்காமல், இயற்கை உணவு நிறங்கள் மற்றும் சுவையூட்டும் பொருட்களையே நாங்கள் ஊக்குவிக்கிறோம். வழக்கமான இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் தினசரி செய்பொருட்கள் மற்றும் மசாலாக்களை கொண்டு செய்யப்படும் எளிமையான அதேசமயம் சுவையான சமையலை ஹாட்ஸ்பாட் கிச்சன் உங்களுக்கு வழங்குகிறது. பிராந்திய சமையல் கலைகளை சார்ந்த பழங்கால சமையலுக்கு ஒரு தனித்துவமான சுவையை நாங்கள் கொடுக்கிறோம். செய்வதற்கு சுலபமான ரெஸ்டாரென்ட் பாங்கிலான வீட்டிலேயே தாயர் செய்யும் அசல் இந்திய சமையல் குறிப்புகளையும் இங்கே காணலாம்.

சமையல் என்பது ஒரு கலை, மேலும் உங்கள் சமையலறை சௌகரியத்திலேயே உங்களுக்கு உகந்த நேரத்தில் ஆரோக்கியமான சுவையான உணவுகளை சுலபமாக தயாரிக்க தேவையான உணவுப்பட்டியலை தயாரிக்க எங்கள் வீடியோக்கள் உங்களுக்கு ஊக்கம் அளிக்கும். நாங்கள் தயாரிக்கும் அனைத்து வீடியோக்களையும் பார்த்து மகிழ்ந்தீர்கள் என நாங்கள் நம்புகிறோம்!

சுவையும் நறுமணமும் நிறைந்த உலகிற்கு உங்களை வரவேற்கிறோம்!