சிந்தாமணி சிக்கன் சமையல் குறிப்பு

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான பாரம்பரிய சமையல் முறையில் தயாரான அசல் சுவை நிறைந்த சிந்தாமணி சிக்கனை சுவைத்து மகிழுங்கள்.
கோழிகளில் பல இரகங்கள் உண்டு, அதேப்போல சுவையிலும் பல இரகங்கள் உண்டு. அத்தகு வேறுபட்ட ஒரு காரசார சுவை கொண்ட ஒரு கோழிக்கறி சமையலை தான் நாம் இன்று ஹாட்ஸ்பாட் கிச்சனில் காணப்போகிறோம். அந்த காரசார சுவை மிகுந்த கோழிக்கறியின் பெயர் சிந்தாமணி சிக்கன் / காரசார சிக்கன். வருங்கள் உங்கள் நாவிற்கு ஒரு புதுசுவையை கொடுக்க கிச்சனுக்குள் போவோம்.
சிந்தாமணி சிக்கன் / காரசார சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:
சிக்கன் (எலும்பில்லாதது), ½ கிலோ
சின்ன வெங்காயம் (நறுக்கியது), ¼ கிலோ
காய்ந்த மிளகாய், 15 எண்ணிக்கை (விதை நீக்கியது)
உப்பு, தேவையான அளவு
நல்லெண்ணெய், 3 தேக்கரண்டி
செய்முறை விளக்கம்:
1. கோழிக்கறியை சுத்தம் செய்து எலும்பில்லாமல் சின்ன துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
2. சிந்தமாணி சிக்கன் செய்ய உகந்த பாத்திரம் இரும்புக்கடாய் தான், ஏனெனில் இருப்பி கடாய் சூட்டை நன்றாக தக்க வைக்கும் என்பதால், கறி அதில் வெந்து வரும்போது அது சிந்தாமணி சிக்கனுக்கு ஒரு நல்ல சுவையை தரும்.
3. கடாயில் நல்லெண்ணெய் விட்டு அது சூடாகியவுடன் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதில் கவனிக்க வேண்டியது, இஞ்சி பூண்டு விழுதை நிச்சயமாக சேர்க்கக்கூடாது. ஏனெனில், அது சிந்தாமணி சுவையை கெடுத்துவிடும்.
4. வெங்காயம் வதங்கிய பின்னர் காய்ந்த மிளகாவையும் துண்டுகளாக வெட்டி வைத்துள்ள கோழிக்கறியையும் சேர்த்து வதக்கவும். இதில் கூடுதலாக நீர் சேர்க்காமல் கோழிக்கறியிலிருந்து வெளியேறும் நீரிலேயே கறியை வேக வைக்கவேண்டும். கறி சற்று வதங்கியவுடன் கடாய்க்கு மூடியிட்டு சிறிது நேரம் கறியை வேகவிடவும்.
5. இடையிடையே மூடியை திறந்து கறி வெந்துள்ளதா இல்லையா என்பதை பார்த்து தேவையெனில் சற்று நீர் சேர்த்தும் வேகவிடலாம்.
6. கோழிக்கறி வெந்து வந்தவுடன் காரசாரமான சிந்தாமணி சிக்கன் தயார். உங்கள் வயிற்றையும் நாவையை தயார் செய்துக்கொள்ளுங்கள், சுட சுட சிந்தமாணி சிக்கன் உங்கள் மேஜை தேடி வருகிறது.