மதுரை வெள்ளாட்டு கறிக்குழம்பு / மட்டன் குழம்பு

மட்டன் குழம்பு

உங்கள் எல்லோரையும் ஹாட்ஸ்பாட் கிச்சனுக்கு வருக, வந்து சுவையுடன் நறுமணம் கமழும் சமையல் குறிப்பை பெறுக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம்.

CategoryMutton Recipes, Non Veg RecipesDifficultyIntermediate

Yields1 Serving
Prep Time5 minsCook Time20 minsTotal Time25 mins

மதுரை வெள்ளாட்டு கறிக்குழம்பு / மட்டன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
 வெள்ளாட்டுக்கறி, ½ கிலோ
 இலவங்கப்பட்டை, 2 எண்ணிக்கை
 கிராம்பு, 2 எண்ணிக்கை
 ஏலக்காய், 2 எண்ணிக்கை
 அன்னாசி பூ, 1 எண்ணிக்கை
 சோம்பு, 1 தேக்கரண்டி
 கசகசா, ½ தேக்கரண்டி
 சின்ன வெங்காயம், 100 கிராம்
 தக்காளி (நறுக்கியது), 2 எண்ணிக்கை
 தேங்காய், 3 துண்டுகள்
 குழம்பு மசாலா, 1 ½ தேக்கரண்டி
 மட்டன் மசாலா, 1 தேக்கரண்டி
 மஞ்சள் தூள், ¼ எண்ணிக்கை
 இஞ்சி பூண்டு விழுது, 1 தேக்கரண்டி
 கருவேப்பிலை
 உப்பு, தேவையான அளவு
 கடலெண்ணெய், 3 தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:
1

சுத்தம் செய்து வைத்துள்ள வெள்ளாட்டுக்கறியை எடுத்து அதில் 1½ தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மற்றும் தேவையான அளவு உப்பையும் ஒரு டம்பளர் நீரையும் சேர்த்து குக்கரில் 4 விசில் வரும் வரை வேக
வைக்கவும்.

2

வெள்ளாட்டு கறிக்குழம்பு / மட்டன் குழம்புக்கு தேவையான மசாலாவை தயார் செய்வோம்: ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் கசகசா மற்றும் சோம்பை சேர்த்து எண்ணெய் இல்லாமல் வறுக்கவும். வறுபட்ட பொருட்கள் பொரிந்து வந்ததும் அவற்றை அடுப்பிலிருந்து இறக்கவும்.

3

மீண்டும் வாணலியில் ½ தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் தோலுறித்த சின்ன வெங்காயங்களை போட்டு வதக்கவும். பின்னர், நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். வதங்கிய பொருட்களை தனியே எடுத்து வைக்கவும்.

4

மீண்டும் வாணலியில் தேங்காய் துண்டுகளை போட்டு எண்ணெய் இல்லாமல் வறுக்கவும். தேங்காய் வறுபட்டவுடன், தேங்காவையும் கசகசா சோம்பையும் ஒன்றாக சேர்த்து அரைக்க வேண்டும். அதே போல் வதக்கிய வெங்காயம் தக்காளியை ஒன்றாக அரைக்க வேண்டும்.

5

இப்போது, அடுப்பில் ஒரு கடாயை வைத்து அது சூடானவுடன் 3 தேக்கரண்டி கடலெண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானவுடன் கடாயில் இலவங்கப்பட்டை, ஏலக்காய், கிராம்பு, மற்றும் அன்னாசி பூ சேர்த்து பொறிக்கவும். சேர்க்கப்பட்ட பொருட்கள் பொறிந்தவுடன் கறிவேப்பிலையை சேர்த்து பின்னர் வேக வைக்கப்பட்ட வெள்ளாட்டுக்கறியையும் சேர்க்கவும்.

6

வெள்ளாட்டுக்கறியை முன்னரே வேக வைத்துவிட்டதால் அதை எண்ணெயில் வறுப்பதால் கறி இறுகிப்போகாது.

7

ஒரு தேக்கரண்டி மட்டன் மசாலாவை கடாயில் சேர்க்கவும். இது குழம்புக்கு நல்ல சுவையை தரும். கூடவே கையால் அரைத்த குழம்பு மசாலாவை சேர்த்துக்கொள்ளவும். பின்னர், அரைத்து வைத்துள்ள வெங்காயம் தக்காளி விழுதை சேர்த்து குழம்பை வதக்கவும்.

8

சுவைக்கு உப்பையும் தேவையான அளவு நீரையும் சேர்க்கவும். கறி வேகவைத்த நீரையும் தேங்காய் அறைத்த நீரையும் வீணாக்காமல் இதில் சேர்த்தால் குழம்புக்கு நல்ல சுவை கிடைக்கும்.

9

அடுப்பை அதிக தீயில் வைத்து கடாயை மூடியிட்டு குழம்பை 8 – 10 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும். இப்போது, தேங்காய், கசகசா, சோம்பு ஆகியவற்றை கொண்டு தயார் செய்துள்ள விழுதை குழம்பில் சேர்த்து மேலும் 5 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் கொதிக்க விடவும்.

10

குழம்பு தயாரான உடன் கொத்தமல்லி சேர்த்து கடாயை அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். வாவ், சூடான மதுரை வெள்ளாட்டு கறிக்குழம்பு / மட்டன் குழம்பு பரிமாற தயார். இது தோசை, இட்லி, சப்பாத்தி, சாப்பாடு என எந்த
உணவுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.

Ingredients

Directions