4 வகையான மேகி உணவு தயாரிப்பு

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான அசல் பாரம்பரிய சுவை நிறைந்த நான்கு வயைகான மேகி உணவு தயாரிப்பை சுவைத்து மகிழுங்கள்.

கிட்டதட்ட நம்மில் எல்லோருக்குமே மேகி என்கிற பெயர் நன்றாகவே தெரிந்திருக்கும் என நான் நம்புகிறேன். ஆமாம், அது ஒரு துரித நூடுல்ஸ் உணவாகும். மேலும், அது 1884 ஆம் ஆண்டு சுவிச்சர்லாந்து நாட்டில் முதல் முறையாக தயாரிக்கப்பட்டது. குறிப்பாக, அது 2 நிமிட நூடுல்ஸ் எனவே சந்தைப்படுத்தப்படுத்தப்பட்டது. மக்கள் அதை ஞாயிற்றுக்கிழமைகளில் லேசான காலை உணவு தேவைப்படும் போதும் மற்றும் மாலை நேர சிற்றுண்டியாகவும் பயன்படுத்துக்கின்றனர். இந்த மேகி உணவு அகிலம் முழுவதிலும் மக்களால் விரும்பி உண்ணப்படுகிறது. நம்மில் பலர் மேகி உணவின் ருசிக்கு கிட்டதட்ட அடிமையாகவே மாறியிருக்கிறோம், ஆனாலும் அதை தயாரிப்பதில் உள்ள வித்தியாசங்கள் நமக்கு கிடைத்துள்ள ஒரு கூடுதல் போனஸ் எனவே கூறலாம். 4 வெவ்வேறான மேகி தயரிப்புகளுடன் இதோ உங்களுக்கு விருந்து படைக்க ஹாட்ஸ்பாட் கிச்சனில் நாங்கள் வருகைத்தந்துள்ளோம். இவற்றில் ஒவ்வொன்றையும் ருசித்துப்பார்த்து உங்கள் கால உணவை கொண்டாடுங்கள்.

4 வகையான மேகி உணவை தயாரிக்கும் செயல்முறை

  • மேகி நூடுல்ஸை கொதிக்க வைத்தல்

4 கப்பு நீரை கொதிக்க வைத்து அதில் 4 பேக்கட்டுகள் மேகி நூடுல்ஸை சேர்த்து 2 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்னர், நீரை வடித்து நூடுல்ஸில் குளிர்ந்த நீரை சேர்த்து மீண்டும் அந்நீரை வடிக்கவும். பின்னர் வேக வைக்கப்பட்டுள்ள நூடுல்ஸை ஒரு தட்டில் சேர்த்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு பக்கமாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  • பிரியாணி மேகி

பிரியாணி மேகி நூடுல்ஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்

  • மேகி – 1 பேக்
  • எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • இலவங்கப்பட்டை – 2 எண்ணிக்கை
  • கிராம்பு – 2 எண்ணிக்கை
  • சீரகம் – 1 சிட்டிகை
  • அன்னாசி பூ – 1 எண்ணிக்கை
  • வெங்காயம் – 1 எண்ணிக்கை
  • மிளகாய் தூள் – ½ தேக்கரண்டி
  • தனியா தூள் – 1 தேக்கரண்டி
  • நறுக்கிய பூண்டு – ½ தேக்கரண்டி
  • சோளம் – 2 தேக்கரண்டி
  • வறுத்த பன்னீர் – 2 தேக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 1 எண்ணிக்கை
  • தயிர் – 1 தேக்கரண்டி
  • நறுக்கிய தக்காளி – ½
  • உப்பு, தேவைக்கேற்ப

பிரியாணி மேகி உணவு செய்முறை

ஒரு கடாயை சூடாக்கி அதில் 2 தேக்கரண்டி எண்ணெய், இலவங்கப்பட்டை, கிராம்பு, சீரகம், தனியாத்தூள், நறுக்கிய பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். பின்னர், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். சோளம், வறுத்த பன்னீர், முழு பச்சை மிளகாய் மற்றும் தயிர் சேர்த்து ஒருசில நிமிடங்கள் வதக்கவும். இப்போது அதில் நறுக்கிய தக்காளி, உப்பு, மற்றும் ஒரு கப்பு நீர் ஆகியவற்றை சேர்த்து கடாயை மூடியிட்டு கலவையை நன்றாக வேகவிடவும். இப்போது கொதிக்க வைக்கப்பட்ட ஒரு கப்பு மேகியை எடுத்து அதில் சேர்த்து நன்றாக கலக்கி கடாயை மூடியிட்டு சமைக்கவும். நீர் வற்றியவுடன், அடுப்பை அணைத்துவிட்டு பிரியாணி மேகி உணவின் மீது கொத்தமல்லி தூவி இறக்கவும். காரசாரமான பிரியாணி மேகி, இதோ தயார்.

  • சைனீஸ் மேகி

சைனீஸ் மேகி நூடுல்ஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்

  • மேகி – 1 பேக்
  • எண்ணெய் – 3 தேக்கரண்டி
  • நறுக்கிய பூண்டு – ¼ தேக்கரண்டி
  • நறுக்கிய பச்சை மிளகாய் – 1 தேக்கரண்டி
  • வெங்காயம் – 1 எண்ணிக்கை
  • மஞ்சள், சிவப்பு, மற்றும் பச்சை குடைமிளகாய் – ¼ கப்பு
  • மேகி மசாலா – 1 எண்ணிக்கை
  • சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
  • சில்லி சாஸ் – 1 தேக்கரண்டி
  • விநிகர் – ¼ தேக்கரண்டி
  • உப்பு, தேவைக்கேற்ப

சைனீஸ் மேகி உணவு செய்முறை

ஒரு கடாயை சூடாக்கி அதில் எண்ணெயை சேர்க்கவும். மேலும் அதில் நறுக்கிய பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் மூன்று வண்ண குடைமிளகாய்களையும் சேர்த்து வதக்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்துக்கொண்டு கடாயில் கொதிக்க வைக்கப்பட்ட மேகி நூடுல்ஸை சேர்த்து நன்றாக கலக்கவும். அதில் பேக்கில் கிடைக்கும் மேகி மசாலா, சோயா சாஸ், சில்லி சாஸ், விநிகர், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் கடாயை மூடியிட்டு குறைந்த தீயில் ஒருசில நிமிடங்கள் வேகவிடவும். ருசியான சைனீஸ் மேகி, இதோ தயார்.

  • இத்தாலிய சீஸ் மேகி

இத்தாலிய சீஸ் மேகி நூடுல்ஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்

  • மேகி – 1 பேக்
  • வெண்ணெய் – 1 கட்டி
  • எண்ணெய் – ½ தேக்கரண்டி
  • நறுக்கிய பூண்டு – 1 தேக்கரண்டி
  • சன்னமாக நறுக்கிய வெங்காயம் – 1 எண்ணிக்கை
  • சோளம் – ¼ கப்பு
  • மஞ்சள், சிவப்பு, மற்றும் பச்சை குடைமிளகாய் – ¼ கப்பு
  • பால் – ½ கப்பு
  • சீஸ், தேவைக்கேற்ப
  • மேகி மசாலா – 1 எண்ணிக்கை
  • உப்பு, தேவைக்கேற்ப
  • மிளகாய் விதை – 1 சிட்டிகை
  • மிளகு தூள் – 1 சிட்டிகை
  • பால் கிரீம் – ½ தேக்கரண்டி

இத்தாலிய சீஸ் மேகி உணவு செய்முறை

ஒரு கடாயை சூடாக்கி, அதில் வெண்ணெய் மற்றும் எண்ணெய், பூண்டு, மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதில் சோளம், மற்றும் குடைமிளகாயை சேர்த்து நன்றாக கிளறவும். இதில் பால் மற்றும் துருவிய சீஸ், மேகி மசாலா, உப்பு மற்றும் கொதிக்க வைக்கப்பட்ட மேகி ஆகியவற்றை சேர்த்து கலக்கி கடாயை மூடியிட்டு 2 முதல் 3 நிமிடங்கள் சமைக்கவும். அது வெந்து வந்தவுடன் அதில் மிளகாய் விதைகள் மற்றும் மிளகு தூளை தூவி, மேலும் பால் கிரீம் சேர்த்து நன்றாக கலக்கவும். இதோ, இத்தாலிய சீஸ் நிறைந்த சூடான மேகி நூடுல்ஸ் தயார்.

  • முட்டை மேகி

முட்டை மேகி நூடுல்ஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்

  • மேகி – 1 பேக்
  • எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • முட்டை – 3 எண்ணிக்கை
  • உப்பு, தேவைக்கேற்ப
  • நறுக்கிய பச்சை மிளகாய், தேவைக்கேற்ப
  • வெங்காயத்தாள், தேவைக்கேற்ப
  • மேகி மசாலா – 1 எண்ணிக்கை

இத்தாலிய சீஸ் மேகி உணவு செய்முறை

ஒரு கடாயை சூடாக்கி, அதில் வெண்ணெய் மற்றும் 3 முட்டை, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். முட்டை வெந்தவுடன், நறுக்கிய பச்சை மிளகாய், மற்றும் வெங்காயத்தாளை சேர்த்து வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி ஒரு ஓரமாக வைக்கவும். வேறொரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் மேகி மசாலா சேர்த்து நன்றாக கலக்கவும். மேலும் அதில் ஒரு கப்பு நீரை சேர்த்து கொதிக்கவிடவும். இப்போது, வேகை வைத்த மேகி நூடுல்ஸை சேர்த்து கடாயை மூடியிட்டு 2 நிமிடங்கள் வேகவிடவும். இப்போது, முன்னரே தயார் செய்துள்ள முட்டையை நூடுல்ஸுடன் சேர்த்து நன்றாக கலக்கவும். உங்கள் பசி ஆர்வத்தை தூண்டும் முட்டை மேகி நூடுல்ஸ் தயார்.

குறிப்புகளும் யுக்திகளும்

  1. மேகியை கொதிக்க வைக்கும் போது அதில் மசாலா அல்லது உப்பை சேர்க்க வேண்டாம்.
  2. மேகியை கொதிக்க வைக்கும் போது அது குறைந்தது 80% வேக வேண்டும்.
  3. சைனீஸ் மேகி நூடுல்ஸை சமைக்கும் போது அதற்கு தேவையான வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சதுர வடிவில் நறுக்கிக்கொள்ள வேண்டும்.