முட்டை ப்ரைடு ரைஸ்

chinese style egg fried rice

உங்கள் எல்லோரையும் ஹாட்ஸ்பாட் கிச்சனுக்கு வருக, வந்து சுவையுடன் நறுமணம் கமழும் சமையல் குறிப்பை பெறுக என இரு கரம் கூப்பி வரவேற்கிறோம். குழந்தைகள் சில நேரம் வழக்கமான உணவுவகைகள் வேண்டாம் என ஒதுக்கும் போது அவர்களை நயம் செய்து சாப்பிட வைப்பது பெற்றோரின் கடமையாகவே இருக்கிறது. அந்த கடமையை செய்வதில் இருக்கும் போராட்டத்தை நினைத்தாலே பல பெற்றோரின் நிலை திண்டாட்டம் தான். அந்த திண்டாட்டத்தை போக்க இதோ ஹாட்ஸ்பாட் கிச்சன் ஒரு அருமையான வழியை கொண்டு வந்திருக்கிறது. ஆம், பெற்றோர்களே, இனி ஆகாரம் வழங்க உங்கள் குழந்தைகள் பின்னால் நீங்கள் போக வேண்டியதில்லை, மாறாக, அவர்களே உணவு வேண்டும் என்று உங்கள் பின்னால் வருவார்கள். அத்தகையை ஒரு அருமையான சுவை மிகுந்த குழந்தைகளுக்கும் பிடித்தமான முட்டை ப்ரைடு ரைஸ் உணவை தான் நமது ஹாட்ஸ்பாட் கிச்சனில் பார்க்கப்போகிறோம்.  

CategoryEgg RecipesDifficultyIntermediate

Yields1 Serving
Prep Time10 minsCook Time20 minsTotal Time30 mins

முட்டை ப்ரைடு ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:
 பாஸ்மதி அரிசி 1½ கப்பு
 பெரிய வெங்காயம் (நறுக்கியது) 1 கப்பு
 வெங்காயத்தாள் (நறுக்கியது) 1 கப்பு
 பீன்ஸ் (நறுக்கியது) 1 கப்பு
 கேரட் (நறுக்கியது) 1 கப்பு
 முட்டை 4 எண்ணிக்கை
 சோயா சாஸ் ¼ தேக்கரண்டி
 உப்பு & மிளகு தூள் தேவையான அளவு
 எண்ணெய் தேவையான அளவு

செய்முறை விளக்கம்:
1

ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து அதில் உப்பு, மிளகு தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி சூரியகாந்தி எண்ணெயை சேர்த்த பின்னர் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து கொதிக்கவிடவும்.

2

சாதம் எண்பது சதவிகிதம் வெந்தவுடன் கஞ்சியை வடித்து எடுத்து சாதத்தை தனியே வைக்கவும்.

3

இப்போது, வேறு ஒரு தவாவில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானவுடன் நான்கு முட்டைகளையும் உடைத்து ஊற்றி அதை பொடிமாசாக கிளறிக்கொள்ளவும்.

4

முட்டை வெந்தவுடன் அதில் வெங்காயத்தாளை சேர்த்து இறக்கி வைக்கவும்.

5

மீண்டும் தவாவில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், கேரட், பீன்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அவற்றை வதக்கவும்.

6

பின்னர், வெங்காயத்தாள் சேர்க்கவும். சேர்க்கப்பட்ட காய்கறிகள் பாதியளவு வெந்து வந்தவுடன் தவாவில் வேக வைத்து எடுத்துள்ள சாதத்தை சேர்த்து அதனுடன் சிறிது சோயா சாஸையும் சேர்த்து கிளறவும்.

7

சற்று நேரம் சாதத்தை கிளறிய பின்னர் தயார் செய்து வைத்துள்ள முட்டையை சேர்த்து லேசாக கிளறவும்.

8

சாதம் சரியான பதத்திற்கு வந்தவுடன் அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி மேலே சிறிது வெங்காயத்தாளை தூவினால் உங்கள் குழந்தைகளை வடம்பிடித்து இழுக்கும் முட்டை ப்ரைடு ரைஸ் பரிமாற தயார்.

Ingredients

Directions