கோதுமை ரவா பொங்கல்

Wheat-rava-pongal

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான கோதுமை ரவா பொங்கலை சுவைத்து மகிழுங்கள்.

நமது நாவிற்கோ சுவையே பிரதானம், அதுவே நமது உடலுக்கோ ஆரோக்கியமே பிரதானம். இப்படி நமக்குள் இருக்கும் இரு அவயங்களுக்குள்ளேயே முரண்பாடு காணப்படும் வேளையில், அவை இரண்டையும் ஒன்றுசேர திருப்படுத்த நமது ஹாட்ஸ்பாட் கிச்சனில் இன்று கொண்டு வருகிறோம் கோதுமை ரவா பொங்கல். வாங்க கிச்சனுக்கு போகலாம்.

கோதுமை ரவா பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்:

சம்பா கோதுமை, ¾ கப்பு
பாசிப்பருப்பு, ¼ கப்பு
சீரகம், 1 தேக்கரண்டி
மிளகு, 1 தேக்கரண்டி
இஞ்சி (நறுக்கியது), 1 தேக்கரண்டி
கருவேப்பிலை
உப்பு, தேவையான அளவு
சூரியகாந்தி எண்ணெய்
பெருங்காயத்தூள், ½ சிட்டிகை
செய்முறை விளக்கம்:

  1. அடுப்பில் குக்கரை வைத்து சூரியகாந்தி எண்ணெயை சூடாக்கி அதில் சீரகம், மிளகு, நறுக்கிய இஞ்சி, ½ சிட்டிகை பெருங்காயத்தூள், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்
  2. பின்னர், நீரில் ஊறவைத்துள்ள பாசிப்பருப்பை குக்கரில் சேர்த்து லேசாக கிளறிய பின்னர் சம்பா கோதுமையையும் குக்கரில் சேர்க்கவும்.
  3. சற்று நேரம் கிளறிய பின்னர், ஒன்றுக்கு ஒன்று என்கிற கணக்கில் நீரையும் தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும். இது பொங்கல் என்பதால் வேண்டுமெனில் 1 டம்ளர் நீரை கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.
  4. கோதுமை ரவா பொங்கலை நன்றாக கலக்கிய பின்னர் குக்கரை மூடி மூன்று விசில் வரும்வரை காத்திருந்து அடுப்பை அணைத்துவிடவும்.

கோதுமை ரவா பொங்கல் வெந்து தயாரானவுடன் அதை தேங்காய் சட்னி, சாம்பார், மற்றும் தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.