Print Options:

முட்டை ப்ரைடு ரைஸ்

Yields1 ServingPrep Time10 minsCook Time20 minsTotal Time30 mins

முட்டை ப்ரைடு ரைஸ் செய்ய தேவையான பொருட்கள்:
 பாஸ்மதி அரிசி 1½ கப்பு
 பெரிய வெங்காயம் (நறுக்கியது) 1 கப்பு
 வெங்காயத்தாள் (நறுக்கியது) 1 கப்பு
 பீன்ஸ் (நறுக்கியது) 1 கப்பு
 கேரட் (நறுக்கியது) 1 கப்பு
 முட்டை 4 எண்ணிக்கை
 சோயா சாஸ் ¼ தேக்கரண்டி
 உப்பு & மிளகு தூள் தேவையான அளவு
 எண்ணெய் தேவையான அளவு
செய்முறை விளக்கம்:
1

ஒரு பாத்திரத்தில் நீரை கொதிக்க வைத்து அதில் உப்பு, மிளகு தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி சூரியகாந்தி எண்ணெயை சேர்த்த பின்னர் ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை சேர்த்து கொதிக்கவிடவும்.

2

சாதம் எண்பது சதவிகிதம் வெந்தவுடன் கஞ்சியை வடித்து எடுத்து சாதத்தை தனியே வைக்கவும்.

3

இப்போது, வேறு ஒரு தவாவில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானவுடன் நான்கு முட்டைகளையும் உடைத்து ஊற்றி அதை பொடிமாசாக கிளறிக்கொள்ளவும்.

4

முட்டை வெந்தவுடன் அதில் வெங்காயத்தாளை சேர்த்து இறக்கி வைக்கவும்.

5

மீண்டும் தவாவில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானவுடன் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், கேரட், பீன்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அவற்றை வதக்கவும்.

6

பின்னர், வெங்காயத்தாள் சேர்க்கவும். சேர்க்கப்பட்ட காய்கறிகள் பாதியளவு வெந்து வந்தவுடன் தவாவில் வேக வைத்து எடுத்துள்ள சாதத்தை சேர்த்து அதனுடன் சிறிது சோயா சாஸையும் சேர்த்து கிளறவும்.

7

சற்று நேரம் சாதத்தை கிளறிய பின்னர் தயார் செய்து வைத்துள்ள முட்டையை சேர்த்து லேசாக கிளறவும்.

8

சாதம் சரியான பதத்திற்கு வந்தவுடன் அதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி மேலே சிறிது வெங்காயத்தாளை தூவினால் உங்கள் குழந்தைகளை வடம்பிடித்து இழுக்கும் முட்டை ப்ரைடு ரைஸ் பரிமாற தயார்.