சிக்கன் மலாய் டிக்கா

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான ரெஸ்டாரென்ட் ஸ்டைல் சிக்கன் மலாய் டிக்காவை சமைத்து மகிழுங்கள். சிக்கன் மலாய் டிக்காவை சமைக்க அவனோ கிரில்லோ தேவைப்படுமென நினைத்து இதை சமைப்பதை தவிர்த்துவிட வேண்டாம். உங்கள் நாசுவையை தட்டியெழுப்பும் இந்த சிக்கன் மலாய் டிக்கா உணவை சமைக்க உங்கள் வீட்டிலுள்ள தவாவே போதுமானது. நான் பயன்படுத்தியுள்ள இந்த யுக்தியை பயன்படுத்தி நீங்களும் உங்கள் சமையலறையிலேயே ரெஸ்டாரென்ட் ஸ்டைல் சிக்கன் மலாய் டிக்காவை தயாரித்து உங்கள் அன்பானவர்களுக்கு பரிமாறுங்கள்.

சிக்கன் மலாய் டிக்காவை சமைக்க தேவையான பொருட்கள்:

 • எலும்பில்லா சிக்கன் – 250 கிராம்
 • இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
 • கரம் மசாலா – 1 தேக்கரண்டி
 • கருப்பு மிளகு – ¼ தேக்கரண்டி
 • உப்பு, சுவைக்காக
 • எலுமிச்சை – ½ அளவு
 • பாலாடை கட்டி – ¼ கப்பு
 • தயிர் – ½ கப்பு
 • கிரீம் – ¼ கப்பு
 • பச்சை மிளகாய் விழுது – 1 தேக்கரண்டி
 • வெள்ளை மிளகு – ¼ தேக்கரண்டி
 • கொத்தமல்லி மற்றும் புதினா – ¼ கப்பு
 • நெய் – 2 தேக்கரண்டி
 • நிலக்கரி – 1 துண்டு

சிக்கன் மலாய் டிக்கா செய்முறை:

சிக்கன் மலாய் டிக்கா செய்முறையில் இரண்டு வகை காடி ஊறவைப்பு காணப்படுகிறது.

காடி ஊறவைப்பு – 1

 • ஒரு கிண்ணத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்துக்கொண்டு அதில் இஞ்சி பூண்டு விழுது, கரணம் மசாலா, மற்றும் கருப்பு மிளகை சேர்க்கவும்.
 • ½ பாக எலுமிச்சையை சிக்கன் துண்டுகள் மீது பிழிந்து நன்றாக கலக்கிக்கொள்ளவும்.
 • அதை ½ மணி நேரத்திற்கு ஊற விடவும்.

காடி ஊறவைப்பு – 2

 • காடி ஊறவைப்பு முதல் நிலை முடிந்ததும், வேறு ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் பாலாடை, தயிர், கிரீம், பச்சை மிளகாய் விழுது, வெள்ளை மிளகு, கொத்தமல்லி, புதினா, ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அவற்றை நன்றாக கலக்கவும்.
 • காடியில் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை இந்த விழுதில் சேர்த்து சிக்கன் துண்டுகள் மீது அந்த விழுது நன்றாக படியும் வரை கலக்கவும். தேவையெனில், நீங்கள் வெங்காயத்தையும் குடை மிளகாயையும் சதுரங்களாக வெட்டிக்கொண்டு அவற்றையும் பயன்படுத்தலாம்.
 • மசாலா பூசப்பட்ட சிக்கன் துண்டுகளை பிரிஜ்ஜில் 4 மணி நேரத்திற்கு வைக்கவும்.

வறுத்தல்

 • இப்போது மர ஸ்கீவரை நீரில் 5 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
 • காடியில் ஊற வைத்த சிக்கன் துண்டுகளையும் காய்கறிகளையும் (தேவையெனில்) ஸ்கீவரில் செருகி இரண்டு துண்டுகளுக்கு இடையே போதுமான அளவு இடைவெளி இருக்கும்படி அடுக்கவும்.
 • ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடாக்கவும்; தவாவில் நெய் சேர்த்து சிக்கன் துண்டுகளை ஸ்கீவருடன் போட்டு மிதமான தீயில் வறுக்கவும்.
 • ஸ்கீவரை சுற்றி அனைத்து பக்கங்களிலும் சிக்கன் துண்டுகளை சமைக்கவும். சிக்கன் துண்டுகள் பொன்நிறமாகம் வரை சமைக்கவும்.
 • ஒவ்வொரு ஸ்கீவரையும் சமைக்க 7 முதல் 10 நிமிடங்கள் வரை ஆகும்.

சுவையூட்டல்:

இந்த சமையலின் இறுதி பகுதி ரெஸ்டாரென்ட் ஸ்டைல் சிக்கன் மலாய் டிக்காவிற்கு பார்பிகியூ சுவையை கொடுப்பதாகும்.

 • இதற்கு, சிக்கன் மலாய் டிக்கா உள்ள ஸ்கீவரை ஒரு கடாயில் அடுக்கி வைத்து மேலும் கடாயின் மத்தியில் ஒரு சிறிய ஸ்டீல் பாத்திரத்தை வைக்கவும்.
 • இப்போது, எடுத்து வைத்துள்ள நிலக்கரியை நேரடியாக தீயில் வாட்டி அந்த ஸ்டீல் பாத்திரத்தில் போடவும்.
 • சூடாக உள்ள நிலக்கரி மீது நெய்யை ஊற்றவும். நெய் ஊற்றியவுடன் நிலக்கரியிலிருந்து புகை கிளம்வும். இப்போது கடாயை மூடியிட்டு 15 நிமிடங்களுக்கு விட்டு வைக்கவும்.
 • 15 நிமிடங்களுக்கு பின்னர் சிக்கன் மலாய் டிக்கா சுவையுடனும் நறுமனத்துடனும் பரிமாற தயாராகிவிடும்.