கோவில் புளியோதரை / புளிசாதம்

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய (ஐயர்/ஐயங்கார்) சமையல் முறையில் தயாரான கோவில் புளியோதரை / புளிசாதத்தை சுவைத்து மகிழுங்கள்.

அநேக தென்னிந்தியர்களின் கடவுள் நம்பிக்கை என்பது மிகவும் ஆழமானதாகவும் உண்மையானதாகவும் காணப்படும். அதன் விளைவே அவர்கள் தங்களுக்காகவும் தங்கள் குடும்பத்திற்காகவும் கோவில் குளம் என அதிகம் பயணிப்பார்கள். அவ்வாறு அவர்கள் கோவில்களை தரிசிக்கும் போது கடவுளின் ஆசீர்வாதத்தை நாடுவார்கள், மேலும் அதை பிரசாத வடிவிலும் எதிர்பார்ப்பார்கள். அத்தகைய ஒரு திவ்ய உணவு அல்லது பிரசாதத்தை தான் நாம் இன்று ஹாட்ஸ்பாட் கிச்சனில் பார்க்கப்போகிறோம். கோவில் புளியோதரை அல்லது புளிசாதம் என்பது நல்ல சுவையுடன் கடவுள் அருளையும் நமக்கு பெற்றுத்தருகிறது. ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து கோவில் புளியோதரை / புளிசாதத்துடன் அசல் பாரம்பரிய சமையல் முறையை கொண்டாடுங்கள்.

தேவையான பொருட்கள்:

இப்போது, புளியோதரை / புளிசாதம் செய்ய தேவையான பொருட்களை காண்போம்:

 • புளி, 200 கிராம்
 • காய்ந்த மிளகாய், 8
 • தனியா, 2 தேக்கரண்டி
 • கடலைபருப்பு, 2 தேக்கரண்டி
 • வெந்தயம், 1 தேக்கரண்டி
 • எள்ளு, 1 தேக்கரண்டி
 • வறுத்த வேர்க்கடலை, 2 தேக்கரண்டி
 • கடுகு, ½ தேக்கரண்டி
 • மஞ்சள் தூள், ½ தேக்கரண்டி
 • பெருங்காயத்தூள், ½ தேக்கரண்டி
 • நல்லெண்ணெய், 100 மி.லி.
 • கருவேப்பிலை
 • உப்பு, தேவைக்கேற்ப

செய்முறை:

 1. கோவில் புளியோதரை / புளிசாதம் செய்ய முதற்படியாக, ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.
 2. தனியா, கடலை பருப்பு, சிகப்பு மிளகாய், மற்றும் வெந்தயம் ஆகியவற்றை கடயால் தனித்தனியாக வறுத்தெடுக்கவும். 
 3. வறுத்த அந்த பொருட்களை எல்லாம் ஒரு மிக்ஸியில் போட்டு ஒன்றும் பாதியுமாக அறைக்கவும். இதில் பாதியை கோவில் புளியோதரை குழம்பிலும் மீதியை கோவில் புளியோதரை சாதத்தை கிளறும் போதும் சேர்க்க வேண்டும்.
 4. ஒரு கடாயில் 100 மி.லி. நல்லெண்ணெய் விட்டு சூடாக்கவும். எண்ணெய் சூடானவுடன் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்தவுடன், வறுத்த வேர்க்கடலை, கடலை பருப்பு, கறுவேப்பிலை, மஞ்சள் தூள், மற்றும் பெருங்காயத்தூளை சேர்க்கவும்.
 5. பின்னர் அரைத்து வைத்துள்ள தூளில் பாதியையும் தயார் செய்துள்ள புளிகரைசலையும் கோவில் புளியோதரை குழம்பில் சேர்த்து கலக்கவும். சுவைக்கு உப்பை சேர்க்கவும்.
 6. இந்த குழம்பை அதிக தீயில் நன்றாக கொதிக்கவிடவும். குழம்பில் எண்ணெய் மிதந்து வரும்போது கோவில் புளியோதரை குழம்பு தயாராகிவிடும். கடாயை அடுப்பிலிருந்து இறக்கவும்.
 7. அதே வேளையில், ஒரு காய்ந்த மிளகாவையும் எள்ளையும் மிக்ஸியில் எடுத்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
 8. ஒரு அகலமான கிண்ணம் அல்லது தட்டில் சிறிது சாதம் எடுத்துக்கொண்டு அதில் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு நன்றாக கிளறிக்கொள்ளவும். இது சாதம் உதிரியாக இருக்க உதவும்.
 9. எண்ணெய் கலந்துள்ள சாதத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் மீதமுள்ள அரைத்த தூளையும் எள்ளு மிளகாய் தூளையும், மற்றும் தயார் செய்துள்ள புளி குழம்பையும் சேர்த்து கிளறவும்.
 10. இறுதியில் சாதத்தில் கருவேப்பிலை, வறுத்த முந்திரி மற்றும் வேர்க்கடலை சேர்த்து 10 நிமிடங்கள் ஊறவைத்தால் சுவை கமழும் கடவுளின் ஆசீர்வாதம் பெற்ற கோவில் புளியோதரை / புளிசாதம் பரிமாற உங்கள் சமையலறையில் தயாராகிவிடும்.
 11. தெய்வ பக்தியுடன் கோவில் புளியோதரை / புளிசாதத்தை பரிமாறுங்கள்.