திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான அசல் பாரம்பரிய சுவை நிறைந்த திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணியை சுவைத்து மகிழுங்கள்.

திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணியை 1957 ஆம் ஆண்டு முதன் முதலாக சமைத்து காட்டியவர் திண்டுகல் திரு. நாகசாமி நாயுடு அவர்கள் ஆவார். அவர் எப்போதுமே தலைப்பாகையுடனேயே காட்சியளிப்பார், ஆகவே பின்நாளில் அதுவே அவர்களது பிராண்ட் பெயராக, “தலப்பாக்கட்டி“, உருவெடுத்தது. தற்போது, தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி உலகம் முழுவதிலும் பாரட்டப்படும் ஒரு உணவாக உள்ளது. திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணியின் அமோக நறுமணம் உங்களை அதன் அபிமானியாகவே மாற்றிவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. உங்கள் குடும்ப கொண்டாட்டங்களிலும் வாரயிறுதிகளிலும் உங்கள் குடும்பத்துடன் சுவைத்து மகிழ இதோ சுவை மிகுந்த திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி சமையல் குறிப்பு உங்கள் வீட்டு சமையலறை தேடி வருகிறது.

திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணியை தயார் செய்ய தேவையான பொருட்கள்:

  • எலும்பில்லா மட்டன் – 1 கிலோ
  • சீரகசம்பா அரிசி – 800 கிராம்
  • சின்ன வெங்காயம் – 10 எண்ணிக்கை
  • இஞ்சி பூண்டு விழுது – 2 மேஜைக்கரண்டி
  • பச்சை மிளகாய் – 10 எண்ணிக்கை
  • இலவங்கப்பட்டை – 3 எண்ணிக்கை
  • கிராம்பு – 10 எண்ணிக்கை
  • ஏலக்காய் – 10 எண்ணிக்கை
  • அன்னாசி பூ – 2 எண்ணிக்கை
  • முந்திரி பருப்பு – 10 எண்ணிக்கை
  • கல்பாசி – 2 தேக்கரண்டி
  • பிரியாணி இலை – 2 எண்ணிக்கை
  • ஜாதிக்காய் – 1 தேக்கரண்டி
  • கடலை எண்ணெய் – 200 மி.லி.
  • நெய் – 50 மி.லி.
  • கொத்தமல்லி – 1 கப்பு
  • புதினா – 1 கப்பு
  • தயிர் – 200 மி.லி.
  • காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
  • தனியா தூள் – 2 தேக்கரண்டி
  • சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
  • எலுமிச்சை – 1 எண்ணிக்கை
  • உப்பு, தேவைக்கேற்ப

திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணியை தயார் செய்வதற்கான செய்முறை:

முன்கூட்டி தயாரிப்பு செயல்முறை

  • ஒரு பிரஷர் குக்கரை எடுத்துக்கொண்டு அதில் மட்டன் துண்டுகள், உப்பு, மற்றும் நீரை சேர்த்து 5 முதல் 7 விசில் வரும் வரை சமைக்கவும்.
  • சீரகசம்பா அரிசியை கழுவி குறைந்தது 30 நிமிடங்களுக்கு நீரில் ஊற வைக்கவும்.
  • அதே நேரத்தில், சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் இஞ்சி பூண்டை ஒன்றாக சேர்த்து கொர கொரவென அறைத்து எடுத்து வைக்கவும்.
  • மேலும், இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, முந்திரி பருப்பு, கல்பாசி, பிரியாணி இலை, மற்றும் ஜாதிக்காய் ஆகியவற்றை நல்ல தூளாக அரைத்து எடுத்து வைக்கவும்.

திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி சமைப்பதற்கான படிகள்

  • ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் கடலை எண்ணெய் மற்றும் 50 மி.லி. நெய்யை சேர்க்கவும். அது சூடானவுடன், அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும்.
  • அரைத்து வைத்துள்ள இதர மாசால தூளை சேர்த்து வதக்கவும்.
  • இப்போது, கொத்தமல்லி, புதினா, மற்றும் தயிரையும் சேர்க்கவும்.
  • காஷ்மீரி மிளகாய் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், மஞ்சள் தூள், மற்றும் தேவைக்கேற்ப உப்பையும் சேர்க்கவும்.
  • இப்போது, சமைத்து வைத்துள்ள மட்டனையும் சேர்த்து நன்றாக கலக்கி இரண்டு நிமிடங்களுக்கு வதக்கவும்.
  • 4 கப்புகள் அரிசி எடுத்துள்ளதால் 8 கப்புகள் நீரை நாம் சேர்க்க வேண்டும்.
  • குக்கரை மூடியிட்டு 2 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.
  • கொதி வந்தவுடன், அதில் ஊற வைத்துள்ள அரிசியை போட்டு நன்றாக கலக்கவும். இந்த பதத்தில், தேவையெனில் கூடுதல் உப்பை சேர்க்கவும்.
  • மீண்டும் குக்கரை மூடியிட்டு மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு சமைக்கவும்.
  • பிரியாணியில் நீர் வற்றியவுடன், திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணியை தம்மிடவும்.

திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணியை தம்மிட்டு சமைப்பதற்கான வழிமுறை

  • திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி மீது ஒரு மேஜைக்கரண்டி நெய்யை ஊற்றி சிறிது புதினாவை தூவி விடவும்.
  • அடுப்பில் ஒரு தவாவை வைத்து அதன் மீது திண்டுக்கல் மட்டன் பிரியாணி உள்ள பாத்திரத்தை வைக்கவும்.
  • பிரியாணி பாத்திரத்தின் மீது ஒரு வாழையிலையை வைத்து அதன் மீது மூடியிடவும். நீராவி வெளியே கசிவதை தவிர்க்க மூடியின் பக்கவாட்டுகளில் கோதுமை பிசைந்த மாவை வைத்து இறுக்கமாக மூடி தட்டின் மீது ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி வைக்கவும்.
  • 12 முதல் 15 நிமிடங்களுக்கு குறைந்த தீயில் பிரியாணியை தம்மிடவும்.
  • பின்னர், அடுப்பை அணைத்து 5 நிமிடங்களுக்கு பாத்திரத்தை அப்படியே வைக்கவும்.
  • சற்று நேரம் கழித்து, மூடியை திறந்து சுட சுட திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணியை அவித்த முட்டையுடனும் வெங்காய ரைத்தாவுடனும் சுவைத்து மகிழுங்கள்.

குறிப்புகளும் யுக்திகளும்

  • திண்டுக்கல் தலப்பாக்கட்டி மட்டன் பிரியாணி சமைக்க எப்போதுமே கனத்த அடிப்பாகம் கொண்ட பாத்திரத்தையே பயன்படுத்தவும்.
  • சீரகசம்பா அரிசியில் பிரியாணி சமைக்க நீரை எப்போதுமே 2:1 என்கிற விகிதாச்சாரத்திலேயே பயன்படுத்தவும்.
  • அரிசி ஊற வைக்க பயன்படுத்திய நீரை பிரியாணி சமைக்க பயன்படுத்துங்கள். இது சமையலுக்கு மேலும் சுவைகூட்டும்.
  • தயிரும் எலுமிச்சை சாறும் சமையலுக்கு புளிப்பு சுவையை கூட்டும். ஆகவே, திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி சமைக்கும் போது அதில் தக்காளியை பயன்படுத்த வேண்டாம்.