வீட்டில் செய்த சிக்கன் ஷவர்மா சமையல் குறிப்பு

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான அசல் சுவை நிறைந்த சிக்கன் ஷவர்மாவை சுவைத்து மகிழுங்கள்.

சிக்கன் ஷவர்மா மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள துருக்கியில் காணப்படும் டோனேர் கெபாப் எனப்படும் ஒருவகை உணவிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். அசலில் ஒரு செங்குத்து ரொட்டிசெரியில் ஆட்டிறைச்சியை வறுத்து ஷவர்மா உருவாக்கப்பட்டிருந்தாலும்கூட, சமீப காலத்தில் உலகம் முழுவதிலும் விரும்பப்படும் ஒரு வீதி உணவாக சிக்கன் ஷவர்மா உருவெடுத்துள்ளது. உங்கள் வீட்டிலேயே கார்லிக் மாயோ சாஸுடன் கூட சிக்கன் ஷவர்மாவை சமைப்பது எட்டாக்கனியாக நீங்கள் கருதினால் எங்களது இந்த சமையல் குறிப்பை படித்த பின்னர் அது எந்தளவு பொய்யான எண்ணம் என்பதை நினைத்து நீங்கள் வருந்துவீர்கள். ஒரு கிரில்லோ அல்லது செங்குத்தான ரொட்டிசேரியோ இல்லாமல் வீட்டிலேயே சிக்கன் ஷவர்மாவை சமைப்பது உண்மையிலேயே வெகு சுலபமானது. நீங்கள் அதிகம் விரும்பும் கார்லிக் மாயோ சாஸுடன் கூடிய வீட்டில் செய்த சிக்கன் ஷவர்மாவை தயார் செய்ய நீங்கள் ஆர்வ மிகுதியுடன் காணப்படுவீர்கள் என நான் நம்புகிறேன்.

வீட்டில் செய்த சிக்கன் ஷவர்மாவை தயார் செய்வதற்கான பொருட்கள்:

 • எலும்பில்லா சிக்கன் – 500 கி
 • மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
 • காஷ்மீரி மிளகா தூள் – 1 தேக்கரண்டி
 • கரம் மசாலா – ½ தேக்கரண்டி
 • தனியா தூள் – ½ தேக்கரண்டி
 • தயிர் – 2 தேக்கரண்டி
 • நறுக்கிய முட்டைகோசு – ½ கப்பு
 • நறுக்கி வெள்ளரிக்காய் – ¼ கப்பு
 • கேரட் – ¼ கப்பு
 • வெங்காயம் – 1 எண்ணிக்கை
 • ஈஸ்ட் – 1 தேக்கரண்டி
 • சர்க்கரை – 1 மேஜைக்கரண்டி
 • வெதுவெதுப்பு நீர், தேவைக்கேற்ப
 • மைதா மாவு – 250 கிராம்
 • ஒலிவ எண்ணெய், தேவைக்கேற்ப
 • முட்டையில்லா மயோநைஸ் – ½ கப்பு
 • பூண்டு – 3 பள்ளு
 • வெள்ளை எள்ளு – 1 தேக்கரண்டி
 • எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
 • மிளகு – ¼ தேக்கரண்டி
 • உப்பு, தேவைக்கேற்ப

வீட்டில் செய்த சிக்கன் ஷவர்மாவை தயார் செய்வதற்கான செய்முறை:

 • முதலில், ஈஸ்ட், சர்க்கரை, மற்றும் 60 மி.லி. வெதுவெதுப்பு நீர் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் ஒன்றாக சேர்த்து கலக்கி 5 நிமிடங்கள் வைக்கவும்.
 • வீட்டில் செய்த சிக்கன் ஷவர்மா பிசைந்த மாவை தயார் செய்தல்
 • ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் மைதா மாவு, 1 தேக்கரண்டி உப்பு, 1 மேஜைக்கரண்டி எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
 • இப்போது அந்த கலவையுடன் ஆக்டிவேட் செய்யப்பட்ட ஈஸ்டை சேர்த்து கலக்கவும்.
 • ¼ கப்பு வெதுவெதுப்பான நீரை சேர்த்து மாவை பிசையவும்.
 • பின்னர் 1 தேக்கரண்டி ஒலிவ எண்ணெயை சேர்த்து மாவை 8 முதல் 10 நிமிடங்களுக்கு பிசையவும்.
 • பிசைந்த மாவை ஒரு கிண்ணத்தில் வைத்து அதன் மீது ஒருசில சொட்டு ஒலிவ எண்ணெயை விட்டு கிண்ணத்தை மூடியிட்டு இரண்டு மணி நேரம் அப்படியே இருக்கும்படி விட்டுவிடவும். இதனால் பிசைந்த மாவு காய்ந்துவிடாமல் இருக்கும்.
 • இரண்டு மணி நேரம் கழித்து பிசைந்த மாவு உப்பி வரும்.
 • பின்னர் பிசைந்த மாவை எடுத்து சில நிமிடங்களுக்கு நன்றாக பிசைந்து அவற்றை சிறு சிறு உருண்டைகளாக (எலுமிச்சை பழ அளவுக்கு) பிடித்துக்கொள்ளவும்.
 • இந்த உருண்டைகளை 5 நிமிடங்களுக்கு ஒரு துணி கொண்டு மூடிவைக்கவும்.
 • பின்னர், இந்த உருண்டைகளை நன்றாக உருட்டி அதை ரொட்டியாக தேய்க்கவும்.
 • மிதமான சூட்டில் இந்த ரொட்டிகளை சுட்டெடுக்கவும்.
 • இப்போது சுடப்பட்ட இந்த ரொட்டிகள் சிக்கன் ஷவர்மா செய்வதற்கு தயாராகிவிட்டது.
 • வீட்டில் செய்த சிக்கன் ஷவர்மா செய்வதற்கு தேவையான கார்லிக் மயோநைஸ் தயார் செய்தல்
 • முட்டையில்லா மயோநைஸ், பூண்டு பள்ளுகள், எலுமிச்சை சாறு, வெள்ளை எள்ளு, மிளகு, ¼ தேக்கரண்டி உப்பு, ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.
 • ஹேண்ட் இம்மர்ஷன் பிளண்டர் கொண்டு இந்த கலவையை கலக்கிக்கொள்ளவும். இப்போது வீட்டில் செய்த சிக்கன் ஷவர்மா தயார் செய்ய தேவையான கார்லிக் மயோநைஸ் சாஸ் தயாராகிவிட்டது.
 • வீட்டில் செய்த சிக்கன் ஷவர்மா தயார் செய்வதற்கு தேவையான சிக்கனை தயார் செய்தல்
 • ஒரு கிண்ணத்தில் சிக்கன் துண்டுகளை எடுத்து அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா, தயிர், மற்றும் ¼ தேக்கரண்டி உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
 • அவற்றை நன்றாக கலக்கிக்கொண்டு 30 நிமிடங்கள் மேரிநேட் செய்யவும்.
 • ஒரு வாணலியில் ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு மேரிநேட் செய்த சிக்கன் துண்டுகளை பென்நிறமாக வறுத்தெடுக்கவும்.
 • வறுத்த சிக்கன் துண்டுகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
 • நறுக்கிய முட்டை கோசு, வெள்ளரிக்காய், கேரட், வெங்காயம், மற்றும் கார்லிக் மயோநைஸ் சாஸை சிக்கன் துண்டுகளுடன் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளவும்.
 • இப்போது சிக்கன் ஷவர்மா தயார் செய்ய தேவையான பொருட்கள் எல்லாம் தயாராக இருக்கிறது.
 • இறுதியாக, ரொட்டி மீது மயோநைஸ் தடவி வறுத்த சிக்கன் துண்டுகளை வைத்து ரொட்டி மடிக்கவும்.
 • வா ரே வா… நாவில் சுவை தீட்டும் வீட்டில் சமைத்த சிக்கன் ஷவர்மா உங்கள் தட்டில் தயாராகிவிட்டது.

குறிப்புகளும் யுக்திகளும்

 • உங்களுக்கு புளிப்பு சுவை அதிகம் பிடிக்குமெனில், வீட்டில் சமைத்த சிக்கன் ஷவர்மாவுக்கான மேரிநேட் தயார் செய்யும் போது அதில் எலுமிச்சை சாறை சேர்த்துக்கொள்ளலாம்.
 • வீட்டில் சமைத்த சிக்கன் ஷவர்மாவை தயார் செய்ய சிக்கன் தொடைகள் நல்ல தேர்வாக இருக்கும்.
 • சிக்கனை நீங்கள் வாணலியில் சமைப்பதற்கு பதிலாக அதை கிரில்லும் செய்யலாம்.