ரெஸ்டாரென்டு பானி சிக்கன் ப்ரைட் ரைஸ்

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான அசல் சுவை நிறைந்த சிக்கன் ப்ரைட் ரைஸ் உணவை சுவைத்து மகிழுங்கள்.

ப்ரைட் ரைஸ் என்பது ஒரு சீன உணவு வகையாகும், மேலும் அதில் பல்வேறு வகைகள் காணப்படுகிறது. மற்ற எல்லா ப்ரைட் ரைஸ்களை காட்டிலும் சிக்கன் ப்ரைட் ரைஸ் உணவே வீதி உணவுகளை பரவலாக ஆக்கிரமித்து பலராலும் விரும்பி உண்ணப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் சிக்கன், முட்டை மற்றும் பல்வேறு காய்கறிகள் நமக்கு தேவையான புரதம், நார்சத்து, மற்றும் மாவுச்சத்தை கொடுக்கிறது. சிக்கன் ப்ரைட் ரைஸ் உணவை தயாரிப்பது மிகவும் எளிமையானது மற்றும் அதை நீங்கள் சமைக்க சிரமப்பட வேண்டாம். சுவையான ரெஸ்டாரென்ட் பானியிலான சிக்கன் ப்ரைட் ரைஸ் உணவை தயாரிக்க தேவையான வழிமுறைகளை இங்கே காண்போம். சுவை நரம்புகளை சுண்டி இழுக்கும் சிக்கன் ப்ரைட் ரைஸ் உணவை தயார் செய்து உங்கள் குடும்பத்தை குஷிப்படுத்துங்கள்.

சிக்கன் ப்ரைட் ரைஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்

 • பாஸ்மதி அரிசி – 1 ½ கப்பு
 • எலும்பில்லா சிக்கன் – 500 கி
 • சோளமாவு – 1 தேக்கரண்டி
 • மிளகு தூள் – ¼ தேக்கரண்டி
 • சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
 • முட்டை – 3 எண்ணிக்கை
 • நறுக்கிய பூண்டு – 1 தேக்கரண்டி
 • நறுக்கிய வெங்காயத்தாள் – 1 கப்பு
 • நறுக்கிய பீன்ஸ் – 1 தேக்கரண்டி
 • நறுக்கிய கேரட் – 1 தேக்கரண்டி
 • நறுக்கிய முட்டைகோஸ் – 1 தேக்கரண்டி
 • விநிகர் – 1 தேக்கரண்டி
 • எண்ணெய், தேவைக்கேற்ப
 • உப்பு, தேவைக்கேற்ப

 

சிக்கன் ப்ரைட் ரைஸ் செய்முறை

படி – 1: பாஸ்மதி அரிசியை சமைத்தல்

பாஸ்மதி அரிசியை நீரில் 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். ஒரு கடாயில் 4 கப்புகள் நீரை விட்டு அதில் 1 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் 1 தேக்கரண்டி உப்பை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் கொதிக்கும் நீரில் பாஸ்மதி அரிசியை சேர்க்கவும். 80% வரை சாதம் வெந்து வந்ததும், நீரை வடித்து ஆற வைக்கவும். இப்படி செய்வது சாத பருக்கைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் உதிரியாக இருக்கும்.

படி – 2: சிக்கன் மற்றும் முட்டையை வறுத்தல்

சிக்கனை சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொண்டு அதில் சோளமாவு, மிளகு தூள், சோயா சாஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கி 15 நிமிடங்கள் சிக்கனை ஊற விடவும். ஒரு கடாயை வைத்து அதில் 1 மேஜைக்கரண்டி எண்ணெயை விட்டு சூடாக்கி மசாலாவில் ஊறிய சிக்கன் துண்டுகளை போட்டு அவை பொன்நிறமாகும்வரை வறுக்கவும். அதே கடாயில், உப்பு மற்றும் மிளகு தூளை சேர்த்து முட்டையை வறுக்கவும். அது வறுபட்டவுடன், வெங்காயத்தாளை மேலே தூவி இறக்கிவிடவும். சிக்கன் ப்ரைட் ரைஸ் தயாரிக்க தேவையான சிக்கனும் முட்டையும் தயாராகிவிட்டது.

படி – 3: சிக்கன் ப்ரைட் ரைஸை தயாரித்தல்

ஒரு கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும். நறுக்கிய இஞ்சி, பூண்டு, மற்றும் 1 மேஜைக்கரண்டி சன்னமாக நறுக்கிய வெங்காயத்தாளின் கீழ்த்தண்டு ஆகியவற்றை சூடான எண்ணெயில் சேர்த்து வதக்கவும். பின்னர் பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து சற்று நேரம் சமைக்கவும். வறுத்த சிக்கன் துண்டுகள், முட்டை, மற்றும் வேக வைத்து எடுத்த பாஸ்மதி அரிசி ஆகியவற்றை அதில் சேர்க்கவும். பின்னர் அடுப்பை குறைந்த தீயில் வைத்து அதில் விநிகர், 1 தேக்கரண்டி சோயா சாஸ், ஒரு சிட்டிகை மிளகு தூள், உப்பு, மற்றும் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். வெங்காயத்தாளை தூவி கடாயை அடுப்பிலிருந்து இறக்கவும். தயார் ஆகியுள்ள சிக்கன் ப்ரைட் ரைஸை பாத்திரத்திற்கு மாற்றி குடும்பமாக சாப்பிட்டு மகிழுங்கள்.

குறிப்புகளும் யுக்திகளும்

 1. சமைக்கும் போது நீரில் கொதிவந்தவுடன் மட்டுமே பாஸ்மதி அரிசியை சேர்க்கவும்.
 2. சிக்கன் ப்ரைட் ரைஸ் செய்வதற்கு அரிசியை அதிகமாக வேக வைத்துவிடக் கூடாது.
 3. நீளமாகவும் சன்னமாகவும் வெட்டிய சிக்கன் துண்டுகளே சிக்கன் ப்ரைட் ரைஸ் செய்ய சரியான தேர்வாக இருக்கும்.
 4. சிக்கன் சமைக்க பயன்படுத்திய எண்ணெயிலேயே முட்டையையும் வறுத்துக்கொள்ளவும்.