சிக்கன் ஷேக் கெபாப்

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான சிக்கன் ஷேக் கெபாபை சுவைத்து மகிழுங்கள்.

கெபாப்கள் அகிலம் முழுவதிலும் சரியான காரணங்களுக்காக மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இவை சுவை மிகுந்தவை மட்டுமல்லாமல் சாப்பிட எளிதானதும் ஆரோக்கியமானதுமாகும், குறிப்பாக அதை ஆரோக்கியமாக சமைத்தால். இந்த சிக்கன் ஷேக் கெபாபை சமைக்க சில நிமிடங்களே போதுமானதாகும். நம்புங்கள், இதை தயாரிக்க நீங்கள் செலவிடும் நேரம் உண்மையிலேயே இலாபகரமானது தான். சமையல் பொருட்களை தயார் செய்துக்கொண்டு இந்த சுவைமிகுந்த சிக்கன் ஷேக் கெபாப் உணவை சமைத்து அதை சப்பாத்தியுடன் பரிமாறுங்கள்.

சிக்கன் ஷேக் கெபாப் செய்ய தேவையான பொருட்கள்:

 • சக்கன் (எலும்பில்லாதது), ½ கிலோ
 • வெங்காயம் (நறுக்கியது), 1 எண்கிக்கை
 • இஞ்சி பூண்டு விழுது (மிளகு சேர்த்தது)
 • பச்சை மிளகாய், 1 எண்ணிக்கை
 • எண்ணெய்/நெய், 50 மி.லி.
 • கடலைமாவு, 2 தேக்கரண்டி
 • மஞ்சள் தூள், ½ தேக்கரண்டி
 • உப்பு, தேவையான அளவு
 • மல்லித்தூள், 2 தேக்கரண்டி
 • கெபாப் தூள், ½ தேக்கரண்டி
 • மிளகாய் தூள், 1 தேக்கரண்டி
 • கரம் மசாலா, 1 தேக்கரண்டி
 • எலுமிச்சை, 1 எண்ணிக்கை

செய்முறை விளக்கம்:

 1. எலும்பில்லா கோழிக்கறியை மிக்ஸியில் போட்டு 10-15 விநாடிகளுக்கு கூழாக அரைத்துக்கொள்ளவும்.
 2. கூழாக அரைத்த கோழிக்கறியை ஒரு அகலமான கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதில் இஞ்சி பூண்டு விழுது (மிளகு சேர்த்தது), எடுத்து வைத்துள்ள மசலாக்கள், கடலைமாவு, பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து இறுதியாக எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு தேக்கரண்டிய எண்ணெயையும் சேர்த்துக்கொள்ளவும்.
 3. இந்த கலவையை 2 – 3 நிமிடங்களுக்கு நன்றாக கலக்கி கறி மசாலாவில் ஊறுவதற்காக ½ மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை விடவும்.
 4. கறி தயாரானவுடன் அதில் கொத்தமல்லியை சேர்க்கவும்.
 5. பின்னர் ஒரு மரம் அல்லது உலோக ஸ்கீவர் எடுத்து அதில் எண்ணெய் பூசிக்கொள்ளவும்.
 6. பின்னர், மசாலாவுடன் கலந்து வைத்துள்ள கறியை ஒரு எலுமிச்சை பழ அளவு எடுத்து ஸ்கீவர் மீது உருளையாக பிடித்து ஸ்கீவரிலிருந்து தனியாக எடுத்து வைக்கவும். இந்த உருளைகள் மெல்லியதாக இருந்தால் சமைக்க எளிமையாக இருக்கும்.
 7. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும். சூடான எண்ணெயில் உருளையாக பிடித்து வைத்துள்ள கறியை ஒன்றுடன் ஒன்று தொட்டுக்கொள்ளா வண்ணம் போடவும்.
 8. கெபாப் எல்லா பக்கங்களிலும் வெந்துவருவதை உறுதி செய்ய ஒவ்வொரு 2 நிமிடத்திற்கும் வாணலியில் உள்ள கெபாப்களை திரும்பிட போடவும். நாலாபுறமும் கெபாப் வெந்து வந்தவுடன், சூடான சுவையான சிக்கன் ஷேக் கெபாப் பரிமாற தயார்.