சிக்கன் கபாப் பிரியாணி சமையல் குறிப்பு

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான முகலாயரின் சமையல் முறையில் தயாரான அசல் பாரம்பரியம் நிறைந்த சிக்கன் கபாப் பிரியாணியை சுவைத்து மகிழுங்கள். வீட்டிலும் வெளியே உணவகங்களிலும் சாப்பிட்ட உணவையே திரும்ப திரும்ப சுவைப்பது அலுத்துவிட்டதா உங்களுக்கு? அப்படியென்றால், உங்கள் வழக்கமான அலுப்புதட்டும் உணவுகளுக்கு விடைகொடுத்து புதிய உணவை சுவைக்க நேரம் வந்துவிட்டது. நாங்கள் ஹாட்ஸ்பாட் கிச்சனில் கொண்டு வருகிறோம், முகலாயரின் சமையல் முறையில் தயாரான அருமையான உணவு, சிக்கன் கபாப் பிரியாணி. மேலும், அது உங்களுக்கு எப்போதுமே அலுப்பை தராமல் உங்களை ஒவ்வொரு முறையும் புதிய சுவையை அனுபவிக்கும்படி செய்யும். ஹாட்ஸ்பாட் கிச்சன் குடும்ப உறுப்பினர்களே, சிக்கன் கபாப் பிரியாணியை சுவைத்து முகலாயரின் சமையல் முறையை அனுபவித்து உங்கள் கவலைகளை மறந்து சந்தோஷப்படுங்கள். ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து சிக்கன் கபாப் பிரியாணியுடன் அசல் பாரம்பரிய சமையல் முறையை கொண்டாடுங்கள். தேவையான பொருட்கள்:

  • சிக்கன் கபாப் பிரியாணி செய்ய தேவையான பொருட்களை காண்போம்:
  • சிக்கன், ¾ கிலோ
  • நறுக்கிய வெங்காயம், 2
  • நறுக்கிய தக்காளி, 2
  • பச்சை மிளகாய், 1
  • புதினா, தேவையான அளவு
  • கொத்தமல்லி, தேவையான அளவு
  • எலுமிச்சை சாறு, 1 ½ தேக்கரண்டி
  • நெய், 2 தேக்கரண்டி
  • காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி
  • தனியா தூள், 2 தேக்கரண்டி
  • கரம் மசாலா, 2 தேக்கரண்டி
  • சோள மாவு, 2 மேஜைக்கரண்டி
  • அரிசி மாவு, 1 தேக்கரண்டி
  • உப்பு, தேக்கேற்ப
  • இஞ்சி-பூண்டு விழுது, 3 தேக்கரண்டி
  • தயிர், ½ கப்பு
  • ஏலக்காய், 2
  • இலவங்கப்பட்டை
  • கிராம்பு
  • அன்னாசி பூ
  • சீரகம்
  • சூரியகாந்தி எண்ணெய், தேவையான அளவு
  • புட் கலரிங், ½ சிட்டிகை
  • பாஸ்மதி அரிசி, ½ கிலோ
  • வாழையிலை, தேவையான அளவு

செய்முறை: வறுவல் மசாலா: 1. சிக்கன் கபாப் பிரியாணி செய்ய தேவையான கிச்சன் துண்டுகளை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் சோள மாவு, அரிசி மாவு, காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, தயிர் ½ கப்பு, மற்றும் சுவைக்காக உப்பை சேர்த்துக்கொள்ளவும்; சேர்த்த பொருட்கள் எல்லாவற்றையும் நன்றாக கலக்கிக்கொள்ளவும்; சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை மசாலாவில் நன்கு தோய்த்து ½ மணி நேரத்திற்கு ஊற விட்டுவிடவும். பாஸ்மதி அரிசியை முன்கூட்டி சமைத்தல்: 2. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரை எடுத்துக்கொண்டு அடுப்பில் வைக்கவும். அதில் ஏலக்காய், இலவங்கப்பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, ஒரு கைப்பிடி நிறைய நறுக்கிய புதினா, சுவைக்கு தேவையான அளவு உப்பு, மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஆகியவற்றை சேர்க்கவும். இந்த கலவையை சிறிது நேரம் கொதிக்கவிட்டு பின்னர் புட் கலரை சேர்க்கவும். 3. கொதி வந்தவுடன், முன்னரே ஊறவைத்துள்ள பாஸ்மதி அரிசியை அதில் சேர்த்து அரிசியை 60 சதவிகிதம் வரை வேக வைக்கவும். நீரை கூடுதலாக வைத்து இறுதியில் சாதத்தை வடித்து கஞ்சி எடுக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிக்கன் துண்டுகளை வறுத்தல்: 4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானவுடன் அதில் மசாலாவில் ஊறவைக்கப்பட்ட சிக்கன் துண்டுகளை போட்டு வறுத்து எடுக்கவும். சிக்கன் கபாப் பிரியாணி சமைத்தல்: 5. ஒரு மூடி கொண்ட பாத்திரத்தில், 3 தேக்கரண்டி எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். சூடான எண்ணெயில், ஏலக்காய், சீரகம், இலவங்கப்பட்டை, கிராம்பு, மற்றும் அன்னாசி பூவை சேர்க்கவும். 6. சேர்த்த பொருட்கள் பொரிந்தவுடன், பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக வறுக்கவும். 7. இரண்டு தேக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய், ஒரு கைப்பிடி நிறைய நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்க்கவும். 8. பின்னர், காஷ்மீரி மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், மற்றும் 2 தேக்கரண்டி தயிர் ஆகியவற்றை சேர்க்கவும். 9. பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து, ஒரு டம்ளர் வடித்து வைத்துள்ள கஞ்சியையும் சேர்க்கவும். சுவைக்காக உப்பையும் சேர்க்கவும். 10. அடுப்பை சிம்மில் வைத்து, பாத்திரத்தில் வேகவைத்துள்ள சாதத்தை லேயர் போல பரவவிட்டு அதன் மீது வறுத்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை அடுக்கவும்,அதுபோலவே அனைத்து சிக்கன் துண்டுகளையும் சாத லேயர்களுக்கு இடையே வைக்கவும். 11. பின்னர் நறுக்கிய கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, புட் கலர், மற்றும் 2 தேக்கரண்டி நெய்யையும் சேர்த்து சாதத்தை வாழையிலை அல்லது வசதிகேற்ப அலுமிய பாயிலை கொண்டு மூடவும். இப்போது பாத்திரத்தை மூடியிட்டு 20 நிமிடங்கள் குறைந்த தீயில் டம் போட்டு வைக்கவும். 12. இதோ, சுவை கமழும் சிக்கன் கபாப் பிரியாணி பரிமாற தயார், மேலும் இது உங்கள் வழக்கமான உணவுகளால் ஏற்பட்ட அலுப்பையும் நீக்கிவிடும்.