வீட்டில் சமைத்த தந்தூரி சிக்கன் சமையல் குறிப்பு

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான அசல் பாரம்பரிய சுவை நிறைந்த வீட்டில் சமைத்த தந்தூரி சிக்கனை சுவைத்து மகிழுங்கள்.

வீட்டில் சமைத்த தந்தூரி சிக்கனை சமைப்பது மிகவும் சிரமமான விஷயமென நீங்கள் நினைக்கலாம். ஆனாலும் அதை எப்படி எளிதாக செய்வதென நான் இங்கே உங்களுக்கு சொல்லித்தருகிறேன். வீட்டில் சமைத்த தந்தூரி சிக்கனை செய்ய நீங்கள் சிக்கனை கிரில் செய்யவோ அல்லது வறுக்கவோ வேண்டிய அவசியமில்லை. ஆனாலும், கிரில் செய்த தந்தூரி சிக்கனில் காணப்படும் புகை வாசமும் சாறு நிறைந்த சுவையும் அப்படியே கிடைக்கும். வீட்டில் சமைத்த சுவையான தந்தூரி சிக்கனை தயார் செய்ய பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்.

வீட்டில் சமைத்த தந்தூரி சிக்கனை செய்ய தேவையான பொருட்கள்:

 • சிக்கன் – ½ கிலோ
 • மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
 • காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
 • தயிர் – 1 கப்பு
 • இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
 • எலுமிச்சை சாறு – ½ தேக்கரண்டி
 • சிக்கன் 65 பவுடர் – 1 தேக்கரண்டி
 • உப்பு, தேவைக்கேற்ப
 • வெண்ணெய் – 1 தேக்கரண்டி
 • நெய் – 1 தேக்கரண்டி
 • எண்ணெய், தேவைக்கேற்ப

வீட்டில் சமைத்த தந்தூரி சிக்கன் செய்முறை:

 1. சிக்கன் துண்டுகளை நீரில் 3 முதல் 4 முறை கழுவிக்கொள்ளவும். சிக்கன் துண்டுகள் மீது ஒருசில கீறல்களை செய்துக்கொண்டால் மசாலா சிக்கனுக்குள் நன்கு ஊறி தந்தூரி சிக்கனுக்கு நல்ல சுவையை கொடுக்கும்.
 2. சிக்கன் துண்டுகளுடன் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தயிர், இஞ்சி பூண்டு விழுது, சிக்கன் 65 பவுடர், எலுமிச்சை சாறு, மற்றும் உப்பை சேர்த்து நன்றாக கலக்கி அதை 5 முதல் 8 மணி நேரத்திற்கு ஊற விடவும்.
 3. ஒரு கடாயில் எண்ணெய், வெண்ணெய் ஊற்றி அதை சூடாக்கிய பின்னர் சிறிது எண்ணெய் சேர்க்கவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.
 4. பின்னர் கடாயை மூடி 10 முதல் 15 நிமிடங்கள் வேக வைக்கவும். சிக்கன் துண்டுகள் இருபுறமும் நன்றாக வெந்துள்ளதை உறுதி செய்து அவற்றை கடாயிலிருந்து எடுத்துக்கொள்ளவும்.
 5. சமைத்து முடிந்ததும் வீட்டில் சமைத்த தந்தூரி சிக்கனை கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
 6. இப்போது, அடுப்பில் ஒரு அடுப்புக்கரியை வைத்து கொளுத்தவும். அது எரிந்து கனலாக மாறியவுடன் அதை தந்தூரி சிக்கன் உள்ள கிண்ணத்தில் வைக்கவும். அடுப்புக்கரி மீது நெய்யை ஊற்றினால் நல்ல புகைவரும், பின்னர், கிண்ணத்தை மூடி 10 நிமிடங்கள் விடவும்.
 7. 10 நிமிடங்கள் கழித்து ருசியான வீட்டில் சமைத்த தந்தூரி சிக்கன் தயார்.