ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான தென்னிந்திய சமையல் முறையில் தயாரான கோதுமை ரவா பொங்கலை சுவைத்து மகிழுங்கள். நமது நாவிற்கோ சுவையே பிரதானம், அதுவே நமது உடலுக்கோ ஆரோக்கியமே பிரதானம். இப்படி நமக்குள் இருக்கும் இரு அவயங்களுக்குள்ளேயே முரண்பாடு காணப்படும் வேளையில், அவை இரண்டையும் ஒன்றுசேர திருப்படுத்த நமது ஹாட்ஸ்பாட் கிச்சனில் இன்று கொண்டு வருகிறோம் கோதுமை ரவா பொங்கல். வாங்க கிச்சனுக்கு போகலாம். கோதுமை ரவா பொங்கல் செய்ய தேவையான பொருட்கள்: சம்பா கோதுமை, ¾ கப்பு ...