தென்னிந்திய மண்பானை மீன் குழம்பு (மத்தி மீன்)

தென்னிந்திய மண்பானை மீன் குழம்பு (மத்தி மீன்)

என்னதான் இன்றைய தொழில்நுட்பமும் புதுபடைப்புகளும் உலகை ஆக்கிரமித்திருந்தாலும் நமது பாட்டி காலத்து மண்பானை மீன் குழம்பு சுவையே அலாதி தான். அதை இரண்டு நாட்கள் வரை வைத்து சூடு செய்து சாப்பிடும் சுவையோ பலே பலே. அதற்கெல்லாம் நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டுமென நினைக்கிறீர்களா? கவலை வேண்டாம், இதோ, நமது ஹாட்ஸ்பாட் கிச்சன் அதற்கு ஒரு நல்ல தீர்வை கொண்டு வந்திருக்கிறது. ஆம், இன்று நம் கிச்சனில் மண்பானை மீன் குழம்பு எப்படி வைப்பதென்று தான் பார்க்கப்போகிறோம். அதுவும் எண்ணெய்
சத்து மிகுந்த மத்தி மீனில் தான் இன்றைய மண்பானை மீன் குழம்பு மணக்கப்போகிறது. சரி, கிச்சனுக்கு போலாம் வாங்க.