டல்கோனா காபி செய்முறை

ஹாட்ஸ்பாட் கிச்சன் உலகிற்கு வருகை தந்து இன்றைய ஸ்பெஷல் உணவான பாரம்பரிய சமையல் முறையில் தயாரான அசல் சுவை நிறைந்த டல்கோனா காபியை சுவைத்து மகிழுங்கள்.
தற்போது, டல்கோனா காபி பழக்கம் மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்று வருகிறது. அதிகமானோர் அதை தாங்களாகவே தயாரித்துக்கொள்ள முயற்சிக்கிறார்கள். டல்கோனா காபியை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். மேலும், டல்கோனா காபி தயாரிக்க தேவையான அனைத்து பொருட்களும் கிட்டதட்ட உங்கள் வீட்டு சமையலறையிலேயே கிடைத்துவிடும். எனவே, இதை நீங்கள் தவறாது இன்றே முயற்சி செய்யவும்.
டல்கோனா காபி செய்ய தேவையான பொருட்கள்:
1. நெஸ்காபி சன்ரைஸ் (இன்ஸ்டன்ட் காபி பவுடர்) – 3 தேக்கரண்டி
2. சர்க்கரை – 4 தேக்கரண்டி
3. பால் – 2/3 தேக்கரண்டி
4. வெதுவெதுப்பான நீர் – 3 முதல் 4 தேக்கரண்டி
5. ஐஸ் கட்டிகள் – 4 முதல் 5
டல்கோனா காபி செய்முறை விளக்கம்:
1. பாலில் நீரை சேர்க்காமல் சூடாக்கி அதை பிரிட்ஜில் வைத்து குளிரூட்டவும்.
2. ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் காபிதூள், சர்க்கரை, மற்றும் வெதுவெதுப்பான நீரை சேர்க்கவும்.
3. அந்த கலவையை ஒரு கரண்டி கொண்டு 12 முதல் 15 நிமிடங்களுக்கு நன்றாக கலக்கவும். முட்டையை கலக்க பயன்படும் சாதாரண கரண்டியை பயன்படுத்தினால் அதிக நேரம் பிடிக்கும், எனவே ஒரு எலக்ட்ராணிக் கலக்கும் கரண்டியை பயன்படுத்தினால் வேலை வேகமாக முடியும்.
4. அந்த கலவை மிருதுவாகும் வரை நன்றாக கலக்கவும். இறுதியாக, அந்த கலவை கெட்டியாகி ஐஸ்கிரீம் போன்ற ஒரு பதத்தை அடையும்.
5. இப்போது ஒரு டம்ளரை எடுத்துக்கொண்டு அதில் ஐஸ் கட்டிகளை போட்டு உடன் குளிர்ந்த பாலை சேர்த்து பின்னர் அடித்து வைத்துள்ள கலவையையும் சேர்க்கவும்.
6. தயாராக உள்ள டல்கோனா காபி மீது மீது சிறிது காபிதூளை தூவி மணம் சேர்க்கவும்.